More

நடிகர் விவேக் மரணம் – அதிர்ச்சியில் திரையுலகம்….

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விவேக். ரசிகர்களால் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவர். ஏனெனில், நகைச்சுவை மட்டுமின்றி சமூக அவலங்களை தனது நகைச்சுவை மூலம் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு வயது 59.

நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் இருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது இதய செயல்பாட்டை சீர் செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு அவரின் உயிர் பிரிந்துவிட்டது. இது ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.அவரின் இறுதிசடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
 

Published by
adminram

Recent Posts