ரஜினி மாதிரி முடியுமா? எல்லா ஹீரோக்களுக்கும் சேலஞ்ச் விட்ட ஜோதிகா

ஜோதிகா: தமிழ் சினிமாவில் 2கே கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஜோதிகா. தனது துருதுரு நடிப்பாலும் கொஞ்சும் தமிழாலும் தமிழ் ரசிகர்களிடம் அன்பை பெற்றவர். இப்போது தமிழ் நாட்டுக்கே மருமகளாக மாறியிருக்கிறார். வாலி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து சினிமாவில் அறிமுகமான ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, தூள், டும் டும் டும் போன்ற படங்களில் நடித்து ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஜோதிகாவை ரசித்தவர்கள் ஏராளம்: அஜித், விஜய், சூர்யா, மாதவன் , சிம்பு , விக்ரம் என அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து தவிர்க்க முடியாத நடிகை என்ற பேரையும் வாங்கினார். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். ஆரம்பத்தில் கல்லூரி பெண்ணாக பல படங்களில் நடித்திருப்பார். அது இளசுகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அதிலும் டும் டும் டும் படத்தில் ஜோதிகாவை ரசிக்காதவர்களே இல்லை.
பெண்களை மையப்படுத்தி அமையும் கதை: சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே செட்டிலான ஜோதிகா சில காலம் நடிக்காமல் இருந்தார். பின் ஃபீமேல் ஓரியண்டட் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். நாச்சியார், ராட்சசி, 36 வயதினிலே, காற்றின் மொழி ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கவை. தற்போது ஹிந்தியிலும் படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
தயாரிப்பாளராக வெற்றி: சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து பல படங்களை தயாரித்திருக்கிறார்கள். குறிப்பாக கார்த்தி நடிக்கும் பெரும்பாலான படங்கள் சூர்யாவின் 2 டி நிறுவனம்தான் தயாரிக்கிறார்கள். இந்த நிலையில் ஜோதிகாவின் ஒரு பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது ஹீரோக்கள் யாருக்காச்சும் சேலஞ்ச் விட சொன்னால் என்ன சேலஞ்ச் விடுவீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு ஜோதிகா எல்லா ஹீரோக்களுக்கும் அதாவது விஜய், அஜித், சூர்யா, சிம்பு, மாதவன் , விக்ரம் என எல்லாருக்குமே விடுகிறேன். ரஜினி சார் மாதிரி ஃபீமேல் ஓரியண்டட் திரைப்படத்தில் அதுவும் சந்திரமுகி என அந்த நடிகைக்கே டைட்டில் கொடுக்கும் படங்களில் இவர்களால் நடிக்க முடியுமா? அந்த தைரியம் இருக்கிறதா? என்று சேலஞ்ச் விடுகிறேன் என கூறினார்.
அவர் கூறியதை போல சினிமாவில் பெரிய் ஆளுமையாக இருப்பவர் ரஜினி. ஆனால் சந்திரமுகி படம் முழுக்க முழுக்க ஜோதிகாவை மையப்படுத்தியே இருக்கும். எந்த ஒரு ஹீரோவானாலும் இப்படி நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ரஜினி பெருந்தன்மையுடன் இந்தப் படத்திற்கு ஒப்புக் கொண்டது பெரிய விஷயம்தான்.