அசத்தலான உடையில்... ஹாட் லுக்கில் போஸ் கொடுத்த யங் ஹீரோயின்... கீர்த்தி ஷெட்டியின் கிளிக்ஸ்..
தென்னிந்திய சினிமாவில் யங் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு தனது 16 வயதில் பாலிவுட் திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார்.
அதைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலமாக பிரபலமான இவர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
தமிழில் இதுவரை இவர் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு வெளியான கஸ்டடி, தி வாரியர் உள்ளிட திரைப்படங்கள் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
தற்போது நடிகர் கார்த்திக்கின் 'வா வாத்தியாரே' என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற இரண்டு திரைப்படங்களை தனது கைவசம் வைத்திருக்கின்றார்.
இந்த படத்தின் மூலமாக இவர் நேரடியாக தமிழில் அறிமுகமாக இருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜீனி என்ற திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.