Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

மல மல மல மருதமலை….நடிகை மும்தாஜின் தமிழ் சினிமா பயணம்

மல மல மல மருதமலை….நடிகை மும்தாஜின் தமிழ் சினிமா பயணம்

e47a325f3f3e1fd9bd7275a5ad473cdb

ஜார்க்கண்ட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அழகி மும்தாஜ் தமிழ்சினிமா உலகில் தன் பங்களிப்பை அளித்து 40 ஆண்டுகள் ஓடி விட்டன. 

மல மல மல மருத மலை மல மருத மல…என்று குத்தாட்டம் போட்டு இளைஞர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் நடிகை மும்தாஜ். இப்படி ஒரு ஆட்டமா என அசந்து போனார்கள் ரசிகர்கள். படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது. மும்தாஜ் என்ற வெண்கல சிலை போன்ற அழகு நடிகையை தமிழ்சினிமா உலகில் அறிமுகப்படுத்தியவர் டி.ராஜேந்தர். இவர் 1999ல் வெளியான மோனிசா என் மோனோலிசா என்ற படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் மும்தாஜ் அதிரடி கவர்ச்சியைக் காட்டி தமிழ்த்திரையுலகில் குதித்தார். படத்தில் அடிக்கடி பிகினி உடையிலும், 2 பீஸ் உடையிலும் கவர்ச்சியை வாரி வழங்கியிருப்பார். 

4bcc41cbe662ec16d051a800168f08e4

தொடர்ந்து அவரது கட்டுக்கோப்பான உடல் அழகு மற்றும் அம்சமான முகம், உருளும் கண்கள் என ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்க்க அவரிடம் ஏகப்பட்ட அம்சங்கள் நிறைவாய் இருந்தன. சத்யராஜூடன் மலபார் போலீஸ், லூட்டி பிரபுவுடன் பட்ஜெட் பத்மநாபன், மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். விஜய் உடன் குஷி படத்தில் இணைந்து ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவார். ரசிகர்களை பெரிதும் முணுமுணுக்க வைத்து ஆட்டம் போட வைத்த கட்டிப்புடி கட்டிப்புடிடா…கண்ணாளா கண்டபடி கட்டிபுடிடா…என்ற மெகா ஹிட் பாடல் இப்படத்தில் தான் இடம்பெற்றது. படம் வெளியான பின் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

6addc2fd0fb7ccfcc5cb72c208a3adf9

மும்தாஜூக்கு என ரசிகர்கள் வட்டம் அதிகரித்தது. 2001ல் பிரசாந்துடன் இணைந்து நடித்த ஸ்டார் படத்தில் ரசிகா…ரசிகா…என்ற பாடல் இவருக்கு மேலும் புகழ் சேர்த்தது. அதே ஆண்டில் வெளியான சாக்லெட் படம்தான் இவருக்கு ஒரு பெரிய மைல் கல். மல மல பாடல் இடம்பெற்ற படம் இதுதான். 

அர்ஜூனுடன் வேதம், ஏழுமலை, கார்த்திக்குடன் அழகான நாட்கள், சரத்குமாருடன் ஏய், டி.ராஜேந்தருடன் வீராசாமி, ராகவா லாரன்ஸ_டன் ராஜாதி ராஜா என அனைத்து தரப்பு நடிகர்களுடனும் பிசியாக நடித்து தமிழ்சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தார். பிரசாந்துடன் இவர் இணைந்து நடித்த மற்றொரு படம் லண்டன். நடிகர் விஷாலுடன் செல்லமே படத்தில் கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.

127b90bfd328cfb85bf4668ece84e3bb

ஆரம்ப காலத்தில் கவர்ச்சி களத்தில் இறங்கிய மும்தாஜ் போக போக நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுதான் வீராசாமி. தன்னை அறிமுகப்படுத்திய டி.ராஜேந்தருக்கே நன்றி கடன் பட்டவராய் அவருக்கே ஜோடியாக படத்தில் நடித்து தனக்கு கவர்ச்சி மட்டும் அல்ல. நடிப்புத் திறமையும் உண்டு என அவர் நிரூபித்த படம் தான் வீராசாமி. அதே போல் சொன்னால் தான் காதலா என்ற அவரது இயக்கத்தில் வெளியான படத்திலும் மும்தாஜ் நடித்தார். இப்படத்தில் முரளி, ரோஜா, கரண், லிவிங்ஸ்டன், வடிவேலு ஆகியோர் நடித்திருந்தனர். அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் கவரப்பட்ட நடிகை மும்தாஜ் என்றால் மிகையில்லை. இவர் தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். 

11c96272dc8afd7b4db5b6a3a7d0bb9d

திரையுலகம் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தடம் பதித்துள்ளார் மும்தாஜ். கமல்ஹாசனின் பிக்பாஸ் 2வில் கலந்து கொண்டார். கலைஞர் டிவியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். ஸ்டார் விஜய் டிவியில் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் டான்ஸ் நிகழ்ச்சியில் ஜட்ஜ் ஆகவும் பங்கேற்றுள்ளார். இவருக்கு நேற்று (ஜூலை 5) பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top