">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
புது மாப்பிள்ளை விஜய்யை கௌரவப்படுத்திய நடிகை ஷாலினி – மலரும் நினைவுகள்!
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை பெற்று தளபதி என அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்டு 25ஆம் தேதி தனது தீவிர ரசிகையாக சங்கீதாவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜய் நடிகை ஷாலினியுடன் ‘கண்ணுக்குள் நிலவு’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அவருக்கு சங்கீதாவுடன் திருமணம் ஆனது. திருமணம் ஆன புதிதில் புதுமண தம்பதிகளாக திடீரென படப்பிடிற்கு மனைவியை விஜய் அழைத்து வந்துள்ளார்.
அப்போது விஜய்க்கு செட்டில் இருந்தவர்கள் மாலை அணிந்து இருவரையும் கௌரவப்படுத்தினர். அதில் ஷாலினி முக்கியமான நபராக இருந்துள்ளார். இந்த புகைப்படம் தற்ப்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.