More

முழு நிர்வாணமாக நடித்த ஐஸ்வர்யா தத்தா : அதிர்ச்சி தகவல்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் தனது தோழி யாஷிகாவுடன் இணைந்து மற்ற போட்டியாளர்களுக்கு கொடுத்த டார்ச்சர் கொஞ்சநஞ்சம் அல்ல என்பதும் குறிப்பாக பாலாஜி ரித்விகா ஆகியோர் இவர்கள் இருவரால் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

Advertising
Advertising

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பல திரைப்படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் நிலையில் ’பப்ஜி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார். இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்று அவர் நிர்வாணமாக நடிக்க வேண்டிய காட்சி ஒன்று படமாக்கப்பட்டது

இதனை அடுத்து ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் தவிர மற்ற அனைவரும் வெளியேற்றப்பட்டு இந்த காட்சியை படமாக்கபட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஐஸ்வர்யாவுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் விஜய்ஸ்ரீ மிகவும் போல்டாக அவர் நடித்ததாகவும் காட்சி சிறப்பாக வந்திருப்பதாகவும் கூறினார்

அமலாபால் நடித்த ஆடை படத்தின் கதைக்கு எவ்வாறு நிர்வாண காட்சி கதைக்கு முக்கியமாக தேவைப்பட்டதோ அதைவிட முக்கியமாக இந்த படத்தில் நிர்வாண காட்சி முக்கியத்துவம் பெற்றது என்றும் அதை படம் பார்க்கும்போது ரசிகர்கள் உணர்வார்கள் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்

இருப்பினும் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்தது குறித்த தகவல் வெளிவந்ததில் இருந்து கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Published by
adminram

Recent Posts