More

சுழலில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: பரபரப்பு தகவல்

திரைப்படங்கள் போலவே தற்போது வெப்சீரியல்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில் முன்னணி நடிகர் நடிகைகளும் இயக்குனர்களும் தற்போது வெப்சீரீஸில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே

Advertising
Advertising

இந்த நிலையில் ’விக்ரம் வேதா’ என்ற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி தற்போது வெப்சீரிஸ் ஒன்றை இயக்கி வருகின்றனர். இந்த வெப்சீரிஸ்ஸில் நடிகர் கதிர் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடித்து வருகின்றனர். பார்த்திபன் உட்பட பிரபல நடிகர்கள் பலர் இந்த வெப்சீரிஸ்ஸில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த வெப்சீரிஸ்க்கு தற்போது ’சூழல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெப்சீரிஸ் விரைவில் அமேசான் டிஜிட்டலில் ஒளிபரப்பாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுழல் என்ற வெப்சீரிஸ் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மிகப் பெரிய புகழை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Published by
adminram

Recent Posts