ஆரவ்வின் மனைவியிடம் சாரி கேட்ட அஜித்.. பின்ன கொஞ்சம் விட்டிருந்தா உயிரே போயிருக்குமே

அந்த விபத்து: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென அஜித் மற்றும் ஆரவ் சம்பந்தப்பட்ட ஒரு விபத்து காட்சியின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்ததும் ரசிகர்கள் உட்பட திரை பிரபலங்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது உண்மையிலேயே படப்பிடிப்பின் போது நடந்த விபத்து. அப்போது ஆரவ் மற்றும் அஜித் இருந்த அந்த கார் பல்டி அடித்து சுருண்டு விழ உள்ளே இருந்த அஜித் மற்றும் ஆரவ்வுக்கு என்ன ஆச்சு என வெளியில் இருந்த டெக்னீசியன்களுக்கு ஒரே பதற்றம்.
எப்படி வந்தது வாய்ப்பு?: அதன் பிறகு கார் நின்றதும் உடனே அஜித் ஆரவ்விடம் ‘ ஆர் யூ ஓகே’ என்று தான் கேட்டார். இந்த விபத்து குறித்து சமீபத்திய ஒரு பேட்டியில் ஆரவ் உண்மையில் அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை பற்றி விளக்கமாக கூறியிருக்கிறார். இந்த படத்தை பொருத்தவரைக்கும் ஆரவ்வுக்கு வந்த வாய்ப்பு தானாக வந்த வாய்ப்பு தான். ஏற்கனவே கழகத் தலைவன் படத்தில் மகிழ்திருமேனியுடன் பணி புரிந்திருக்கும் ஆரவ் மகிழ்திருமேனியிடம் வாய்ப்பு வேண்டும் என்று கேட்கவே இல்லையாம். விடாமுயற்சி படத்தில் தானாக வந்த வாய்ப்புதான் என அந்த பேட்டியில் கூறினார்.
கில்டியாக ஃபீல் பண்ண வைக்க கூடாது: முதல் முறை அஜித்தை பார்த்ததும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதுவும் ஒரு ரசிகனாக அவரை எப்பொழுது பார்க்கப் போகிறோம் என்ற ஒரு ஆர்வம் எனக்குள் அதிகமாக இருந்தது. கடைசியாக படப்பிடிப்பின் போது அவரை சந்தித்தேன். பார்த்ததும் மிகவும் பணிவன்புடன் பேசினார் அஜித் என ஆரவ் கூறினார். அதன் பிறகு அந்த விபத்து காட்சியின் போது அவர் என்னைப் பற்றி தான் அதிகமாக கவலை கொண்டார். எனக்கு எதுவும் ஆகிவிட்டதா என்பதில்தான் அதிக அக்கறையுடன் இருந்தார். ஒரு ரசிகனாக அவரை கில்டி ஆக பீல் பண்ண வைக்க கூடாது என்பதற்காக நான் வெளியே வந்ததும் நான் நலமுடன் இருக்கிறேன் நன்றாக இருக்கிறேன் என சிரித்துக் கொண்டே தான் காரில் இருந்து வெளியே இறங்கினேன் என ஆரவ் கூறினார்.
மனைவியிடம் பேச சொன்ன அஜித்: இந்த ஒரு சம்பவத்திற்கு பிறகு தான் எங்களுக்குள் நெருக்கமான நட்பு ஆரம்பமானது. அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்ல இந்த சம்பவம் நடந்த அன்று இரவு முழுக்க அஜித் சார் என்னுடன் தான் இருந்தார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்த்து எனக்கு ஒன்றும் ஆகவில்லை என தெரிந்த பிறகுதான் அவருடைய அறைக்கு சென்றார் என ஆரவ் கூறினார். மறுநாள் அந்த விபத்து நடந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தார். இதை உடனே உன்னுடைய மனைவிக்கு அனுப்பு. என்ன நடந்தது என்பது அவருக்கு தெரிய வேண்டும்.’
இல்லையெனில் நாளை அஜித் சார் என்னிடம் மறைத்து விட்டார் என்று உன் மனைவி நினைத்து விடக்கூடாது. அதனால் அவருக்கு அனுப்பி என்ன நடந்தது என்பதை தெளிவாக கூறு என அஜித் சொன்னதாக ஆரவ் கூறினார். அந்த சமயத்தில் ஆரவ்வின் மனைவிக்கு குழந்தை பிறந்து பத்து நாட்கள் தான் ஆனதாம். அந்த நேரத்தில் சொல்லவா வேண்டாமா என யோசித்தாராம். அதன் பிறகு ஒரு நாள் வீடியோவையும் அனுப்பி தொலைபேசியில் இந்த மாதிரி என்ன நடந்தது என சொல்லிவிட்டு அந்த வீடியோவை இப்பொழுது பார்க்காதே. அஜித் சார் உன்னிடம் கேட்டால் வீடியோ பார்த்து விட்டேன் என்று மட்டும் சொல் என தன் மனைவியிடம் கூறியிருக்கிறார்.
அதன் பிறகு தான் அந்த வீடியோ ட்விட்டரில் வைரலானது. அதை பார்த்து தான் என் மனைவி கொஞ்சம் அதிர்ச்சியாகிவிட்டார். பின் அஜித் சார் என் மனைவிக்கு போன் செய்து சாரி கேட்டார். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இது ஒரு ஹேண்ட் பாய் மூமெண்டாகவே நான் எடுத்துக் கொண்டேன். ஒரு மலை உச்சியில் அஜித் சார் மேலிருந்து என் கையைப் பிடித்து நான் கீழே தொங்கினால் கூட மிகவும் நம்பிக்கையுடன் அவர் கையை பிடித்து தொங்குவேன். ஏனெனில் அவர் என்னை கைவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு அஜித் சார் எனக்கு முக்கியம் என ஆரவ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.