என்ன ஸ்டைலா இருக்காப்ல? பிவி சிந்து திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்ட அஜித்

by ராம் சுதன் |

பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பில் அஜித் கலந்து கொண்ட வீடியோ வைரலாகி வருகின்றது. இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து கடந்த 22 ஆம் தேதி தொழிலதிபர் வெங்கட் தத்தாவை திருமணம் செய்து கொண்டார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட் மிண்டன் வீராங்கனை பிவி சிந்துவுக்கும் தொழிலதிபர் வெங்கட் தத்தாவுக்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் நடைபெற்றது.

இவர்கள் திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வந்திருந்து மணமக்களை ஆசிர்வதித்தனர். இந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் பிவி சிந்துவுக்கும் வெங்கட் தத்தாவுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் அஜித்தும் அவருடயை குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

அஜித் , அவருடைய மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் அந்த வரவேற்பில் கலந்து கொண்டனர். அஜித் கருப்பு வெள்ளை நிற கோர்ட் சூட் அணிந்து செம ஸ்மார்ட்டாக இருந்தார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. பெரும்பாலும் அஜித் எந்த ஒரு விழாவுக்கும் பொது நிகழ்ச்சிக்கும் வெளியே வரமாட்டார். கலந்து கொள்ளவும் மாட்டார்.

ஆனால் நீண்ட வருடங்கள் கழித்து பிவி சிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. இன்னொரு பக்கம் மனைவி ஷாலினி ஒரு பேட்மிண்டன் பிளேயர். அதனால் பிவி சிந்துவுக்கும் ஷாலினிக்கும் இடையே அந்த வகையில் ஏதாவது ஒரு நெருக்கம் ஏற்பட்டு ஷாலினி அழைத்ததன் பேரில் கூட அஜித் வந்திருக்கலாம்.

ஏற்கனவே அவருடைய ஸ்லிம்மான புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்து வந்த அஜித் இப்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ‘தல’ய புரிஞ்சுக்கவே முடியலையே என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Next Story