கண்டீசனை வாபஸ் வாங்கிய அஜித்.. அப்போ வர்றாரா? இசை வெளியீட்டு விழா கன்ஃபார்மா?
டிரெண்டாகும் அஜித்:
தற்போது அஜித்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் என இணையதளம் முழுவதும் வட்டமிட்டு கொண்டே வருகின்றன. இதற்கு முன்பு வரை அஜித் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலோ அல்லது புகைப்படமோ வீடியோவோ பெரும்பாலும் வெளியில் பரவியதே கிடையாது. அவருடைய படப்பிடிப்பு மே சத்தமே இல்லாமல் நடந்து முடிந்து விடும்.
படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளியே போகாதவாறு ரகசியமாக வைத்துக் கொள்ள சொல்வார். அதாவது தன் சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலும் வெளியில் பரவி அதற்காக ரசிகர்கள் ஆரவாரம் பண்ணுவது அஜித்தை பொறுத்தவரைக்கும் பிடிக்காத ஒன்று.
ஆடம்பரமில்லாத நடிகர் அஜித்:
அதனாலேயே எந்த ஒரு விளம்பரத்தையும் ஆடம்பரத்தையும் விரும்பாத நடிகராக அஜித் இருந்து வருகிறார். அது மட்டுமல்ல எந்த ஒரு பொது விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதே கிடையாது அஜித். அதற்கு காரணம் ஆரம்பத்தில் அப்படி அடிக்கடி வெளியே போனதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி இருக்கிறது.
அது இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் சில ஆண்டுகளாகவே இந்த மாதிரி அவர் தவிர்த்து வந்தார். ஆனால் சமீப காலமாக அவருடைய புகைப்படங்கள் வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையத்தை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன அதுவும் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண நிகழ்வில் அஜித் கலந்து கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
விடாமுயற்சி இசை வெளியீட்டு விழா:
அவர்களுக்குள் எப்படி ஒரு நட்பு இருந்தாலும் அவ்வளவு சுலபமாக அஜித் எந்த ஒரு நிகழ்விற்கும் கலந்து கொள்ள மாட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் போது திடீரென இந்த திருமண வரவேற்பில் அவர் தோன்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பயில்வான் ரங்கநாதன் இதைப் பற்றி குறிப்பிடுகையில் அஜித் தன்னுடைய கண்டிஷன்களை ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறார். இனிமேல் இப்படி இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதன் காரணமாக விடாமுயற்சி இசை வெளியீட்டு விழாவும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கப்போகிறது.
அந்த விழாவிற்கு முதன்முறையாக அஜித் கலந்து கொள்ள இருக்கிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்றாலும் இது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தான் என கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.