20 வருஷத்துக்கு முன்பு சொன்னதை காப்பாற்றிய அஜித்.. கோபிநாத் சொன்ன சீக்ரெட்

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். சமீபகாலமாக அஜித்தை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. ஒரு பக்கம் கார் ரேசில் அவருடைய அணி மூன்றாவது இடம் பிடித்தது, சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது கிடைத்தது என அடுத்தடுத்து அஜித்தை பற்றி தான் அனைவரும் பேச ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில் அவர் நடித்து ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
படம் பிப்ரவரி 6ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. இதனால் படத்தைப் பற்றிய சில சுவாரசியமான சம்பவங்களை மகிழ்திருமேனி பல பேட்டிகளில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது அஜித்தும் மகிழ்திருமேனியும் பேசிக்கொண்ட சில விஷயங்களையும் பகிர்ந்து இருக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி கூறும் பொழுது ரேஸுக்கு போவதால் அங்கு எனக்கு என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். அதனால் எதற்கும் தயாராக இருங்கள் மகிழ் என சொன்னாராம் அஜித். இதை கேட்பதற்கு உங்களுக்கு அதிர்ச்சியாக இல்லையா ?
உங்களுடைய மனநிலை எப்படி இருந்தது என பிரபல தொகுப்பாளர் கோபிநாத் மகிழ்திருமேனியிடம் கேட்டார். அது மட்டுமல்ல கோபிநாத் கூறும்போது பல வருடங்களுக்கு முன்பு அஜித்தை நான் பேட்டி எடுக்கும் பொழுது அந்த நேரத்தில் அவர் ரேஸை நிறுத்திக் கொண்ட நேரம். ஏன் ரேஸை நான் தவிர்த்தேன் என்பதை பற்றி அஜித் அப்போது கூறி இருந்தார். அதாவது என்னுடைய உள் மனது சொல்லியது. உன்னை நம்பி பணம் போட்டவர்கள், நாளைக்கு உனக்கு ஏதாவது நடந்தால் அது உன்னை மட்டும் பாதிக்காது. உன்னை நம்பி இருக்கும் தயாரிப்பாளர்களையும் பாதிக்கும்.
உன்னுடைய சந்தோஷத்திற்காக மற்றவர்களின் சந்தோஷத்தை ஏன் கெடுக்க வேண்டும் என என்னுடைய உள் மனது சொல்லியதால் ரேஸை நான் நிறுத்திக் கொண்டேன் என அஜித் அப்போது கூறியனார். ஆனால் இப்பொழுது உங்களிடம் கூறியது கொஞ்சம் முரண்பாடாக இருக்கிறது என கோபிநாத் கேட்டபோது அதற்கு மகிழ்திருமேனி சொன்ன பதில் இதோ.
விடாமுயற்சி படத்தை ஜனவரி மாதமே முடிக்க வேண்டியதாக இருந்தது. அதன் பிறகு கொஞ்சம் தள்ளி தள்ளி போய் பிப்ரவரி மாதத்தில் முடிப்பதாக இருந்தது. இதற்கு முன்னாடியே மே மாதத்திலிருந்து குட்பேட்அக்லி படத்திற்கு தன்னுடைய கால் சீட்டை கொடுத்திருந்தார் அஜித். அந்தப் படத்தையும் முடித்துவிட்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ரேஸுக்கு போவதாக இருந்தார் அஜித் என மகிழ் திருமேனி கூறினார்.
ஆக மொத்தம் படங்கள் எல்லாம் முடித்துவிட்டு அதன் பிறகு தான் அவர் ரேஸுக்கு போக தயாராக இருந்திருக்கிறார். அதனால் 20 வருஷத்துக்கு முன்பு அவர் என்ன சொன்னாரோ அதைத்தான் இப்பொழுதும் செய்திருக்கிறார். அவரை நம்பி பணம் போட்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதிலும் இப்போதும் கவனமாக இருந்திருக்கிறார் அஜித் என கோபி நாத் கூறினார்.