இந்த விஷயத்துல நம்பர் ஒன் அஜித்தான்!. அட ரஜினி பாதி கூட இல்லையே!...
எம்.ஜி.ஆருக்கு பின் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக மாறியவர் ரஜினி. அதற்கு காரணம் அவரின் படங்களுக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்புதான். அதற்கு முன் அவரை போல் யாரும் ஸ்டைல் செய்ததில்லை. ஸ்டைல் என்றால் இப்படித்தான் இருக்குமோ என ரசிகர்களை ரசிக்க வைத்தவர் ரஜினி.
முடியை கோதி விடுவது, ஸ்டைலாக நடப்பது என பல விஷயங்களை செய்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர் அவர். இப்போதும் சூப்பர்ஸ்டார் பட்டம் அவரிடம்தான் இருக்கிறது. அதேநேரம் எல்லாமே மாற்றத்திற்கு உட்பட்டதுதானே. புதிய நடிகர்கள் வருவார்கள். ஒருவரின் இடத்தை ஒருவர் பிடிப்பார். இது தவிர்க்க முடியாது.
ரஜினிக்கே டஃப் கொடுக்கும் நடிகர்களாக விஜயும், அஜித்தும் மாறிவிட்டார்கள் என்பதுதான் உண்மை. ஒரே நேரத்தில் வெளியாகி ரஜினியின் பேட்டை படத்தை விட அஜித்தின் விஸ்வாசம் படம் அதிக வசூல் செய்தது. இது ரஜினிக்கே ஆச்சர்யத்தை கொடுத்து விஸ்வாசம் படத்தை போய் பார்த்தார். அதன்பின்னரே அப்பட இயக்குனார் சிவாவின் இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்தார்.
அதேபோல், சில ரஜினி படங்களை விட விஜய், அஜித் படங்கள் அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. இதுவரை ரஜினி படங்கள் வசூல் செய்ததை விட லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் 400 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது. அதன்பின் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் 500 கோடி என சொல்லப்பட்டது.
அதேநேரம், அஜித், விஜய், ரஜினி படங்களின் டிரெய்லர் வீடியோவும் யுடியூப்பில் அதிக வியூஸ்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இதிலும் நம்பர் ஒன் இடத்தில் அஜித்தே இருக்கிறார். விஜயின் லியோ பட டிரெய்லர் வீடியோ 6.65 கோடி வியூஸ்களை பெற்றுள்ளது. மேலும், ரஜினியின் ஜெயிலர் டிரெய்லர் வீடியோ 3.1 கோடியும், அஜித்தின் துணிவு டிரெய்லர் வீடியோ இதுவரை 6.7 கோடி வியூஸ்களையும் பெற்றிருக்கிறது.
மேலும், இந்தியன் 2 டிரெய்லர் வீடியோ இதுவரை 1.4 கோடி வியூஸ்களை பெற்றிருக்கிறது. யுடியூப் டிரெய்லர் வீடியோவை பார்ப்பது இளைஞர்கள் மட்டுமே. அப்படி பார்த்தால் அஜித்துக்கு அதிக மவுசு இருக்கிறது. அடுத்து விஜயும், அவருக்கு பின் ரஜினியும், அவருக்கு பின் கமலும் இருப்பது இதன் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.