அஜித், விஜய் பட நடிகையுடன் இணையும் ரெஜினா: அதிரடி ஆக்சன் படம்!

Published On: December 31, 2019
---Advertisement---

d1b2a3136223a9e811f9dbe0219c2420-3

அஜித் நடித்த ’ஆரம்பம்’ மற்றும் விஜய் நடித்த ’துப்பாக்கி’ ஆகிய படங்களில் நடித்த அக்சராகவுடா என்ற நடிகையுடன் இணைந்து ரெஜினா ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தை கார்த்திக்ராஜூ இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே தினேஷ் நடித்த ’திருடன் போலீஸ்’ மற்றும் ’உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப் படத்தில் ரெஜினா ஒரு ஜோதிடர் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் நாட்டில் நடக்கும் ஆபத்துகளை முன்கூட்டியே தனது ஜோதிட அறிவின் மூலம் உணர்ந்து அதை தடுக்க ரெஜினா எடுக்கும் முயற்சிதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது 
ஜனவரி 10 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த அதிரடி ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது என்றும் இயக்குனர் கார்த்திக் ராஜூ தெரிவித்தார்.

மேலும் ரெஜினா மற்றும் அக்சராகவுடா ஆகிய இருவருக்கும் இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் இருப்பதால் இருவரும் தற்போது ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் இயக்குனர் கார்த்திக் ராஜூ தெரிவித்துள்ளார்

Leave a Comment