விஜய் இடத்தை பிடிக்க போராடும் அஜித், சூர்யா!.. ஜாக்பாட் அடிக்கப் போவது யாருக்கு?..

Published on: August 8, 2024
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் மற்றும் சூர்யா உள்ளனர். சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இன்னமும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர். கமல்ஹாசனுக்கு விக்ரம் படம் ஓடிய அளவுக்கு இந்தியன் 2 திரைப்படம் ஓடவில்லை.

ஜெயிலர் படம் ஓடிய அளவுக்கு லால் சலாம் படம் ஓடவில்லை. வேட்டையன் திரைப்படம் ஓடினால் தான் ரஜினிகாந்தின் கிரவுட் புல்லிங் சக்தி இன்னமும் இருப்பதாக ரசிகர்கள் கருதுவார்கள். தொடர்ந்து நடிகர் சூர்யா ஓடிடி ஹீரோவாகவே மாறியுள்ள நிலையில், கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலை அவருக்கு வாரித் தருமா என்பதை காத்திருந்து தான் காண வேண்டும்.

சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான கங்குவா ஃபர்ஸ்ட் சிங்கிள் நெருப்பு பாடல் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. ஆடி மாத திருவிழாவில் போடப்படும் பாடல் போல இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர். அதேபோல நேற்று இரவு சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான சூர்யா 44 படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சியிலும் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் வைக்காமல் சும்மா சூர்யா சிகரெட் பிடித்துக்கொண்டு நடந்து வருவதை மட்டுமே காட்டியிருந்தனர்.

இன்னொரு பக்கம் அஜித் விடாமுயற்சி படத்தை விரைவாக முடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக குட் பேட் அக்லி படத்திலும் நடித்து வருகிறார். அந்த இரண்டு படங்களும் வெளியானால் மீண்டும் அஜித்தின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா மற்றும் அஜித்குமார் இருவரும் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலை தாண்டவில்லை என்றும் விஜயின் சம்பளமே 200 கோடி ரூபாயை கடந்து விட்டதாக கூறுகின்றனர். விஜய் இடத்தை பிடிக்க முயற்சி செய்து வரும் இருவருக்குமே அடுத்த 2 படங்களில் ஒரு படமாவது இண்டஸ்ட்ரி ஹிட்டாக மாறினால் தான் உண்டு என்கின்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment