கையில் கிட்டார்.. ‘வாரணம் ஆயிரம்’ ரீ கிரியேட்டா? வெளியான அஜித்தின் நியூ லுக்

by ராம் சுதன் |
கையில் கிட்டார்..  ‘வாரணம் ஆயிரம்’ ரீ கிரியேட்டா? வெளியான அஜித்தின் நியூ லுக்
X

நடிகர் அஜித்:தற்போது சமூக வலைதளங்களில் பெருமளவு டிரெண்டிங்கில் இருப்பவர் நடிகர் அஜித். சமீபத்தில்தான் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் படத்தில் நல்ல ஒரு மெசேஜை சொல்லியிருந்தார் மகிழ்திருமேனி. அது சில பேருக்கு பிடித்திருந்தது. சில பேருக்கு பிடிக்காமல் போனது. ஆனால் இதுவரை இல்லாத அளவு விடாமுயற்சி படத்தில் அஜித் வித்தியாசமாக நடித்திருந்தார்.

விடாமுயற்சிக்கே கஷ்டமா? இந்தப் படத்தை பொறுத்தவரைக்கும் இரண்டு வருட போராட்டத்துக்கு பிறகு படம் ரிலீஸாகியிருக்கிறது. ஒரு பக்கம் லைக்காவிற்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் அஜர்பைஜானில் ஏற்பட்ட கால நிலை மாற்றம் என படப்பிடிப்பில் இழுபறி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக படம் வெளியாகி ஓரளவு ரசிகர்களை திருப்திபடுத்தியது.

ரேஸில் கலக்கிய அஜித்: இதற்கிடையில் துபாயில் நடந்த கார் ரேஸில் கலந்து கொண்டு தனது அணி மூன்றாவது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்திருந்தார் அஜித். அவரது நீண்ட வருட கனவாக இருந்ததை நிஜத்தில் சாதித்து காட்டியிருக்கிறார். அடுத்ததாக போர்ச்சுக்கலில் நடக்கும் ரேஸிலும் கலந்து கொள்ள பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். அது சம்பந்தமான வீடியோ புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பத்மபூஷன் அஜித்: இதற்கிடையில் நடுவண் அரது அவருக்கு பத்மபூஷன் விருதை அளித்து பெருமை படுத்தியது. சினிமாவிலும் விளையாட்டுத்துறையிலும் சாதனை படைத்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இதற்கு பல பேர் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் சில பேர் இதை கடுமையாக விமர்சித்தார்கள். இன்று ஆளுநர் பத்மபூஷன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தினார். அதற்கு அஜித் கலந்து கொள்ளவில்லை.

நியூலுக்: இந்த நிலையில் நாள்தோறும் அஜித்தின் புதிய புகைப்படங்கள் வெளியாகி டிரெண்டிங்காகி வருகிறது. இதில் தன்னுடைய எடையை முழுவதுமாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதில் இன்று அஜித் கையில் கிட்டாருடன் படு ஸ்டைலாக போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்.அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/DGFu31tPeIq/?igsh=MTlvaTByZXE4Zm5ubw==

Next Story