More

சொன்ன வாக்கை காப்பாற்றிய தல அஜித்.. அடுத்த படமும் அவருக்குதானாம்!…

அஜித் தற்போது ஹெ.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்து வருகிறார்.

Advertising
Advertising

ஏற்கனவே போனிகபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் ‘நேர்க்கொண்ட பார்வை’படத்தில் அஜித் நடித்திருந்தார்.

இந்நிலையில், வலிமை படத்திற்கு பின்பும் போனிகபூர் தயாரிப்பிலேயே அஜித் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அஜித்தை வைத்து ‘கிரீடம்’ படத்தை இயக்கியவர் என்பது எல்லோருக்கும் தெரியும்..

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மீது மரியாதை வைத்திருக்கும் அஜித், ஒரு முறை அவரிடம் உங்கள் கணவர் போனிபூர் தயாரிப்பில் நான் 3 படங்கள் நடித்துக் கொடுக்கிறேன் என கூறியிருந்தார். தற்போது ஸ்ரீதேவி இல்லை என்றாலும் கொடுத்த வாக்கை அஜித் காப்பாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts