Connect with us
rajini

Cinema History

தளபதி பட விழாவில் இளையராஜா செய்த வேலை!.. ரஜினி அவரை ஒதுக்க காரணமாக இருந்த சம்பவம்!…

இளையராஜா எவ்வளவு திறமைசாலியோ அவ்வளவு அகம்பாவமும் கொண்டவர் என திரையுலகில் பலரும் சொல்வார்கள். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவ்வளவுதான். யாராக இருந்தாலும் ஒதுக்கி விடுவார். 80களில் இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசையை நம்பியே பல திரைப்படங்களும் உருவானது.

தங்களை காப்பாற்ற வந்த கடவுளாக அவரை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் நினைத்தனர்.. இதில் பலரும் அவரின் காலில் விழுந்தனர். இதன் பின்னர்தான் தன்னை கடவுளாகவே நினைக்க துவங்கினார் இளையராஜா என சொல்வார்கள். பல மொக்கை படங்களையும் தனது இசையால் ஓட வைத்தார் ராஜா.

இதையும் படிங்க: முதல்ல மத்தவங்களை மதிக்க கத்துக்கோ.. அப்புறம் நீ டைரக்ட் பண்ணு!.. ஷங்கரை திட்டும் பிரபலம்!..

90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களும் வந்து அவர்களின் பாடல்களும் ரசிகர்களை கவர்ந்ததால் ராஜாவை மட்டுமே நம்பியிருந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர்கள் பக்கம் போனார்கள். இது இளையராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஒருகட்டத்தில் எனது பாடல்களை யாரும் எங்கும் பயன்படுத்தக்கூடாது என காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவரின் நெருங்கிய நண்பர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கும் அனுப்பினார். இதனால், ராஜாவுடன் பேசுவதையே எஸ்.பி.பி தவிர்த்துவிட்டார்.

சமீபத்தில், கூலி படத்தின் புரமோஷன் வீடியோவில் எனது பாடலை என் அனுமதியின்றி பயன்படுத்தி இருக்கிறார்கள் என சொல்லி அப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுதான் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. சம்பளம் வாங்கி கொண்டுதானே எல்லா படங்களுக்கும் ராஜா இசையமைத்தார். எனவே, பாடல்கள் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம் என பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், ராஜாவின் தீவிர ரசிகர்கள் ‘அவர்கள் கேட்பதில் என்ன தவறு?’ என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

கூலி ரஜினி நடிக்கும் படம். ரஜினியும், ராஜாவும் பல வருடங்களாக பழகியவர்கள். இருவருமே ஆன்மிகவாதிகள். ஆனாலும், அவரின் படத்திற்கு ராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதுபற்றி விமான நிலையத்தில் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மழுப்பிக்கொண்டே போய்விட்டார் ரஜினி. ரஜினி முன்பெல்லாம் இப்படி இல்லை. 20 வருடங்களுக்கு முன்பு அவர் மிகவும் கோபக்காரராக இருந்தார். ராஜா மீது கோபப்பட்டு ரஜினி அவரை ஒதுக்கியதற்கு பின்னணியில் ஒரு சம்பவம் இருக்கிறது.

இதையும் படிங்க: டிடிஎஃப் வாசனுக்கு ஒரு ரூல்ஸ்.. அஜித்துக்கு ஒரு ரூல்ஸா? இதென்னப்பா புது பிரச்சினை?

தளபதி படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தபோது எல்லோரும் ராஜாவுக்காக விழா அரங்கில் காத்திருந்தனர். 6 மணிக்கு வருகிறேன் என சொன்னவர் வரவில்லை. நேரம் சொல்ல சொல்ல ரஜினி கோபப்பட துவங்கினார். ஆனால், அவரால் வெளியே காட்ட முடியவில்லை. 8.15 மணிக்கு வந்தார் ராஜா. ஆனால், வந்த பின் அவர் செய்ததுதான் ஹைலைட்..

இசை வெளியீட்டு விழா என்றால் அங்கு கதாநாயகனே இசையமைப்பாளர்தான். அவருக்காகத்தான் எல்லோரும் 2 மணி நேரமாக காத்திருந்தனர். ஆனால், 2 நிமிடங்கள் மட்டுமே அங்கிருந்த ராஜா, மைக்கை பிடித்து தளபதி படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நான் உடனே அங்கு செல்ல வேண்டும்’ என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இது ரஜினிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது. அதன்பின்னரே அண்ணாமலை படத்தில் தேவாவை ரஜினி களம் இறக்கினார் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top