தொட்டு உதவி கேட்ட சின்ன நடிகர்… உதாசீனப்படுத்தி கோச்சிக்கிட்டு போன விஜய்… இவரா இப்படி?

Vijay: நடிகர் விஜய் எப்போதுமே அமைதியான குணம் கொண்டவர். தன் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்றே இருப்பார் என ஒரு தகவல் இணையத்தில் உலா வரும் நிலையில் அவருக்குள் இருக்கும் கொடூர குணம் குறித்து திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

பேரரசு இயக்கத்தில் விஜய் படத்தின் ஷூட்டிங் லொகேஷன் ஒன்றில் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. பொதுவாக ஷூட்டிங்கில் விஜய் வெளியில உட்கார்ந்து யாரிடமும் பேச மாட்டார்.. கேரவனில் தனியாகவே இருப்பார். அவர் காட்சியின் டைமுக்கு வந்து நடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் உள்ளே சென்று அமர்ந்து விடுவார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்தில் விஜய், ரஹ்மான் தலையிட்டது உண்மையா? உண்மையை உடைக்கும் பிரபலம்!

ஆனால் அவர் வெளியில் வரும்போது அங்கு இருப்பவர்கள் பத்தடி தள்ளி நிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு எல்லாம் அனுமதி கிடையாது. சூட்டிங் ஆட்களே 100 பேர் அங்கு இருப்பார்கள். அவர்கள் விஜயை தொட்டுக் கூட பார்த்துவிடக்கூடாது. அவரிடம் பேசினால் இவர் கோபித்து கொண்டு ஷூட்டிங்கைவிட்டே கிளம்பி விடுவார்.

இப்படி கண்டிஷன்களுடனே விஜய் அந்த படத்தில் நடித்து வந்தார். அப்பொழுது சின்ன நடிகர்கள் எல்லாம் ஷூட்டிங் இருக்கு வந்து இயக்குனரிடம் வாய்ப்பு கேட்பது வழக்கம். அப்படித்தான் நடிகர் ஜெயமணியும் பேரரசிடம் வந்து வாய்ப்பு கேட்டிருக்கிறார். அவரிடம் பேசிவிட்டு விஜயை பார்த்திருக்கிறார்.

இதையும் படிங்க: நடிக்க ஜிவி பிரகாஷ் வந்த போது நிறைய கண்டிஷன் போட்டேன்… அதை அவர் கேட்கவே இல்லை… ஓபனாக சொன்ன சைந்தவி!..

நேரா விஜயிடம் சென்ற ஜெயமணி, நடிக்க வாய்ப்பு கேட்க வந்தேன்பா. நீனும் டைரக்டர் எனக்காக கொஞ்சம் பேசி பாரு என கூறிவிட்டு சென்று இருக்கிறார். இதனால் விஜய் மிகவும் கோபமாகி பேரரசுவை அருகில் அழைத்து, அவரிடம் உடனே அவனை வெளியே அனுப்புங்க இல்ல நான் கிளம்பிடுவேன் என மிரட்டி விட்டு சென்றிருக்கிறார்.

இதனால் பேரரசு மிகுந்த வருத்தத்துக்குள்ளாகி இருக்கிறார். இருந்தும் விஜயின் பேச்சை தட்ட முடியாமல் ஜெயமணியை தன்னுடைய உதவியாளர்களை வைத்து வெளியேற்றினாராம். அப்பொழுதுதான் அவருக்கும் தன்னை வெளியேற்றியது விஜய் என தெரிந்ததும், உடனே கோபமானவர் விஜயிடம் போய் நீ எல்லாம் மனுஷன் தானா.

வாய்ப்பு தானே கேட்க வந்தேன். என்னுடைய வாழ்க்கையை கெடுத்துட்டியே. நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட எனத் திட்டிவிட்டு சென்றாராம். இதனால் விஜய் கடுப்பாகி கேரவனில் சென்ற அமர்ந்தவர் பல மணிநேரம் கழித்து டைரக்டர் சமாதானம் செய்த பிறகு நடிக்க வந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

 

Related Articles

Next Story