அரசியல் உள்குத்துன்னா இதுதானா? விஜய்க்கு எதிரா அஜித்தை கைக்குள் போடும் ரெட் ஜெயண்ட்
தற்போது அஜித்தின் அடுத்த படத்திற்கான சம்பளம் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த வருடம் அடுத்தடுத்து அஜித்தின் இரண்டு திரைப்படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கின்றது. விடாமுயற்சி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பரவசப்படுத்தி இருக்கிறது.
இந்த படத்தின் மீது பெருமளவு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து பல பிரச்சினைகளுக்கு பிறகு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதால் பிரபலங்கள் மத்தியிலும் ஒருவித எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இன்னொரு பக்கம் கார் ரேசிலும் முத்திரை பதித்து வருகிறார் அஜித். இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது .
அஜித்தை வைத்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் தனது அடுத்த படத்தை தயாரிக்கப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் சமீபகாலமாக படங்களை வாங்கி விற்கும் வேலையை தான் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கவனித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பு பணியில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஈடுபட போவதாக தெரிகிறது. தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் 163 கோடி என தெரிகிறது .
அதனால் அஜித்திற்கு 200 கோடி சம்பளத்தை கொடுத்து ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை தயாரிக்கப் போவதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதுவும் அஜித்தின் குட் புக்கில் விஷ்ணுவரதன் எப்பொழுதுமே இருப்பதால் அவரை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என்ற எண்ணத்திலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இருக்கிறதாம். இன்னொரு பக்கம் ரேஸ் எல்லாம் முடித்துவிட்டு அஜித் இந்த வருடம் அக்டோபர் மாதம் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதால் விஷ்ணுவர்தனை வைத்து இந்த படத்தை அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் நினைத்திருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல இந்த படம் தொடங்கி அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் திட்டமிட்டு இருக்கிறதாம். இதில் அரசியல் உள் குத்தமாக 2026 சட்டமன்றத் தேர்தல் .அதில் விஜய் பெரிய பலத்துடன் அரசியலை எதிர்கொள்ள இருப்பதால் அவருக்கு எதிராக அஜித் ரசிகர்களை திருப்பும் வகையில் கூட ரெட் ஜெயன்ட் நிறுவனம் அஜித்தை வைத்து படத்தை தயாரிக்கலாம் என்றும் தெரிகிறது.
அதுமட்டுமல்ல அஜித் தரப்பில் 226 கோடி சம்பளம் கேட்டதாகவும் தெரிகிறது. அதற்கும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ஓகே என சொல்லி இருக்கிறதாம். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அரசியலில் விஜய் கவிழ்க்கும் எண்ணத்தில் அஜித்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது . இதனால் கூட சமீபத்தில் முதலமைச்சருக்கு வாழ்த்து உதயநிதிக்கு வாழ்த்து என அஜித் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதற்கு பின்னணியில் இந்த பட டீலிங் கூட இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.