More

வலிமைக்கு பின் அஜித் நடிக்கும் புதிய படம்.. தல 61 மாஸ் அப்டேட்…

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வந்த நிலையில், கொரோனா விவகாரம் தொடர்பாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

Advertising
Advertising

வலிமை பற்றிய எந்த அப்டேட்டும் கிடைக்காமல் அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புலம்பி வருகின்றனர். 

இந்நிலையில், வலிமைக்கு பின் அஜித் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படக்கதையை சுதா கொங்கரா முதலில் விஜயிடம்தான் கூறியிருக்கிறார். ஆனால், இப்படத்தில் ஏனோ விஜய் நடிக்க விருப்பம் காட்டவில்லை. தற்போது இந்த கதையில்தான் அஜித் நடிக்கவுள்ளார். அஜித்துக்கு ஏற்ப சில மாற்றங்களை சுதா செய்து வருகிறாராம். இப்படம் அஜித்திற்கு 61வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts