அமரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழா! முக்கியமானவங்களுக்கு அழைப்பு இல்லையே

Published on: March 18, 2025
---Advertisement---

பிளாக்பஸ்டர் அமரன்: கடந்த வருடம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருப்பார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவானது. இந்த படத்திற்கு பிறகு முகுந்த் மற்றும் இந்து ரபேக்கா வர்கீஸ் போன்ற பெயர்கள் மக்கள் மனதில் என்றும் அழியாத பெயர்களாக மாறிவிட்டன.

பரிதவிப்பு, ஏக்கம்: அந்த அளவுக்கு இருவரின் காதல், இந்த நாட்டிற்காக மேஜர் முகுந்த் வரதராஜன் செய்த தியாகம் என பார்ப்போரை கண் கலங்க வைத்தது. ஒரு சாதாரண ராணுவ வீரரின் குடும்பம் தன் பிள்ளையை ராணுவத்திற்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் வெளிப்படுத்தும் ஏக்கம் ,மனைவியின் பரிதவிப்பு என அனைத்தையும் இந்த படத்தில் அழகாக காட்டியிருப்பார் ராஜ்குமார் பெரியசாமி.

சாய்பல்லவியின் நடிப்பு: இதில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனின் நடிப்பும் இந்த படத்திற்காக அவர் மெனக்கிட்ட விதமும் எடுத்த உழைப்பும் படம் பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது. பாடி பிட்னஸ் என்ற வகையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இன்னொரு பக்கம் சாய்பல்லவி அவரின் நடிப்புதான் இந்த படத்தின் கதை போக்கையே மாற்றியது என்று சொல்லலாம்.

100வது நாள்; எந்தெந்த இடத்தில் எமோஷன் காட்ட வேண்டும் எப்படி காட்ட வேண்டும் எந்த இடத்தில் எமோஷனை அடக்க வேண்டும் என ஒவ்வொரு சீனிலும் சாய் பல்லவி அசத்தியிருப்பார் .படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. 100 நாட்களைக் கடந்தும் படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. இந்த நிலையில் அமரன் திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா இன்று சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல். அதனால் இந்த விழாவிற்கு கமல் உட்பட படக்குழு அத்தனை பேரும் வந்திருக்கின்றனர். இதில் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இந்த விழாவிற்கு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதுதான். அமரன் திரைப்படம் வெளியாகி அதை மக்களிடையே நல்ல முறையில் சேர்த்ததற்கு பத்திரிக்கையாளர்களும் ஒரு காரணம்.

ஆனால் இந்த நூறாவது நாள் விழாவிற்கு அவர்களுக்கே அழைப்பு இல்லை எனும் போது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கின்றனர். கமலை பொருத்தவரைக்கும் அவர் எத்தனை உயரங்களுக்கு சென்றாலும் இதுவரை பத்திரிக்கையாளர்களை என்றுமே மறந்ததில்லை. ஆனால் இந்த விழாவிற்கு மட்டும் ஏன் அழைப்பு கொடுக்கவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment