
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்த ’மாநாடு’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்ற நிலையில் மீண்டும் இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது
இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி 20 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று செய்திகள் வெளியானது
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் ’மாநாடு’ படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளார். இதன்படி இந்த ’மாநாடு’ படத்தில் சிம்புவுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் மற்றும் இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் பொங்கல் தினத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து டைட்டில் போஸ்டரும் அன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுரேஷ் காமாட்சி இந்த டுவிட்டால் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்
ஏற்கனவே சிம்பு, ஹன்சிகாவுடன் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
Update of #Maanaadu for #STR fans is here!
Cast & Crew with Shooting date will be released on Pongal day!
Wishing all my beloved friends and family a very happy and prosperous NewYear!— sureshkamatchi (@sureshkamatchi) December 31, 2019



