More

எசக்கு பிசக்கான கதையில் நடிக்கும் அனுஷ்கா… என்ன கதை தெரியுமா?

தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர், கோலிவுட்டில் நடித்த ரெண்டு திரைப்படம் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. இவருக்கு முதல் படத்திலே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமான அருந்ததியில் நடித்தார். அங்கு துவங்கிய இவரது ஏற்றம். அப்படத்தில் நடித்ததை இன்று வரை பல நடிகைகளால் நெருங்கக்கூட முடியாத அளவுக்கு ட்ரெண்ட் செட் அமைத்து வைத்தார். இதன் பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

Advertising
Advertising

ஆனால், அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வரவில்லை. இந்நிலையில், அனுஷ்கா தற்போது இயக்குனர் மகேஷ் என்பவர் இயக்கும் காதல் படத்திற்கு ஓகே சொல்லி இருப்பதாக தெரிகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகர் நவீன் போலிஷெட்டி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தின் கதை 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை 20 வயது இளைஞர் விரும்புவது போல அமைக்கப்பட்டு இருக்கிறதாம். ஏடாகூடமான கதையில் அனுஷ்கா எப்படி நடிக்க சம்மதிச்சார் என பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts