More

குட்டி மகளுடன் அறந்தாங்கி நிஷா வெளியிட்ட ஃபேமிலி போட்டோ!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அறந்தாங்கி நிஷா. அதன்பின் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.இருந்தாலும் தனது முழு நேர வேலையாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இடையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆங்கராகவும் ரக்சனுடன் சேர்ந்து கலக்கினார்.

Advertising
Advertising

நிஷா தனது அத்தை மகனை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்.  கூடவே சமூக அக்கறையும் , மக்களை மகிழ்விப்பதிலும் தனது முழு நேரத்தை செலவிட்டு வரும் நிஷா தனது குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து ஒருபோதும் சலித்துப்போக மாட்டார். கணவரை கலாய்த்து மாமியார் மாமனாருடன் ஜாலியாக சேட்டை செய்யும் நிஷாவை அனைவருக்கும் பிடிக்கும்.

இவர்களுக்கு ஒரு மகனும் , ஒரு மகளும் இருக்கின்றனர். மகள்  சஃபா ரியாஸ் கடந்த வருடம் தான் பிறந்தார். பார்ப்பதற்கு அப்படியே குட்டி நிஷாவை போலவே இருப்பார். இந்நிலையில் தற்ப்போது தன் மகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படத்தை இன்ஸ்டாவில் முதன்முறையாக வெளியிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts