அவசரப்பட்டுட்டியே அர்ச்சனாக்கா?.. கோட் பட ரிலீஸ் தாமதமாகுதா?.. தயாரிப்பாளர் போட்ட ட்வீட் இதோ!..
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிஜி காட்சிகள் காரணமாக ஒரு பெரிய படம் திட்டமிட்ட ரிலீஸ் தேதியில் வராது என்கிற ட்வீட்டுக்கு அர்ச்சனா கல்பாத்தி அடித்து பிடித்துக்கொண்டு வந்து கமெண்ட் போட்டுள்ளது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி, வைபவ், ஜெயராம் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து வரும் கோட் திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்ததாக மூன்றாவது பாடல் ஒன்று விரைவில் வெளியாக காத்திருக்கிறது. அந்தப் பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளதாகவும் ஸ்ருதிஹாசன் பாடியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
கோட் திரைப்படம் பற்றியே குறிப்பிடாமல் இந்த ஆண்டு சிஜி காட்சிகள் காரணமாக ஒரு பெரிய படம் தாமதமாக போவதாக நெட்டிசன் ஒருவர் ட்வீட் போட்டிருந்தார். உடனடியாக, பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் 24 மணி நேரமும் கோட் படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம்.
நிச்சயம் திட்டமிட்ட தேதியில், படம் வெளியாகும் எந்த தாமதமும் ஏற்படாது என அர்ச்சனா கல்பாத்தி சம்பந்தமே இல்லாமல் ஆஜராகி அப்டேட் கொடுத்துள்ளார். அதன் பின்னர், அதை உணர்ந்த அவர், சாரி நீங்க கோட் படத்தை டேக் செய்யல, நான் தான் வந்து உளறிட்டேனா என்றும் பதிவிட்டுள்ளார்.
விஜய் ரசிகர்களுக்கு கோட் படம் மிகப்பெரிய சம்பவமாக இருக்கும் என்றும் அதற்காக படக்குழு அல்லும் பகலும் உழைத்து வருவதை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துக் கொண்டார்.