தனுஷை பார்த்து மிரண்டு போன அருண்விஜய்!.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க!...

by சிவா |
Raayan
X

Raayan

Arun Vijay: கோலிவுட்டே இப்போது ஆச்சர்யமாக பார்க்கும் ஒரு நபராக தனுஷ் இருக்கிறார். அதற்கு காரணம் அவர் ஓய்வே எடுப்பதில்லை. ஒரு வேளை முடிந்தவுடன் மற்றொரு வேலை. ஒரு வேலை பிரேக்கில் இருக்கும்போது இன்னொரு வேலை என பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

துவக்கத்தில் சினிமாவில் நடித்து மட்டுமே வந்த தனுஷ் ராஜ்கிரணை வைத்து பவர் பாண்டிய படம் இயக்கியதன் மூலம் இயக்குனராக மாறினார். அதன்பின் சில வருடங்கள் நடித்து மட்டுமே வந்த அவர் ராயன் படம் மூலம் மீண்டும் இயக்குனராக மாறினார். ராயன் படத்தை மிகவும் ராவான ஒரு கேங்ஸ்டர் படமாக இயக்கி ஆச்சர்யப்படுத்தியிருந்தார் தனுஷ்.

அதன்பின் இளையராஜாவின் பயோகிராபில் அவர் நடிப்பதாக இருந்தது. ஆனால், அது டேக் ஆப் ஆகாமல் போனது. எனவே, ஏற்கனவே தான் இயக்கி பாதியில் நின்ற நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்தை இயக்கப்போனார். அது நடந்து கொண்டிருக்கும்போதே இட்லி கடை என்கிற படத்தை இயக்கி நடித்தார்.

ஒருபக்கம் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் இணைந்து குபேரா படத்திலும் நடித்து வந்தார். எப்படி ஒருவர் இப்படி ஒரே சமயத்தில் எல்லாம் செய்கிறார் என கோலிவுட்டே ஆச்சர்யப்பட்டது. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை பார்த்த இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா ‘ராயன் போல ஒரு படத்தை முடித்துவிட்டு எப்படி இப்படி ஒரு காதல் கதையை தனுஷ் எடுத்திருக்கிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது’ என வியப்புடன் பேசியிருந்தார்.

தற்போது இட்லி கடை திரைப்படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் தனுஷ் பற்றி அருண் விஜய் சில முக்கிய தகவல்களை சொல்லியிருக்கிறார்.

இட்லி கடை ஷூட்டிங்கின் போது இடைவேளைகளில் தனுஷ் பல வேலைகளை செய்கிறார். ஷூட்டிங் முடிந்து ஓய்வு கிடைக்கும்போது அடுத்த படத்திற்கான திரைக்கதை எழுதுகிறார். ஒருநாள் கேரவனில் ஜிவி பிரகாஷுடன் இணைந்து இசை அமைத்து பாடலும் பதிவு செய்கிறார். இப்படி பன்முக திறமையாளராக இருக்கும் தனுஷ் பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷன்’ என ஃபீல் பண்ணி பேசியிருக்கிறார்.

Next Story