More

தமிழ் சினிமாவில் தொடரும் சோகம்…. அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் மரணம்…..

கொரோனா வைரஸுக்கு திரைப்பிரபலங்கள் தொடர்ந்து பலியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே விவேக், கே.வி.ஆனந்த், நெல்லை சிவா, மாறன் என ஒரு பட்டியலே இருக்கிறது.

Advertising
Advertising

இந்நிலையில், பாடகர், நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பல முகங்களை கொண்ட அருண்ராஜா காமராஜ். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’ படம் மூலம் இயக்குனராக மாறினார். தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் மனைவி கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

வெண்ணிலா கபடிக்குழு, புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று காலை மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts