More

அதுல்யாவின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்!

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்.  

Advertising
Advertising

இந்நிலையில் ரசிகர்களுக்கு விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்து கூறிய அதுல்ய ரவி ” நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்றுநலமுடன் வாழ்க வளமுடன் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்” என்று கேப்ஷன் கொடுத்து புடைவை கட்டி ட்ரஷனல் லுக்கில் வழிப்பட்ட சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். அழகு பதுமையாக இருக்கும் அதுல்யா ஆளாளுக்கு வர்ணித்து தள்ளியுள்ளனர்.

Published by
adminram