
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை கதற விடுபவர்.
விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கியவர். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பல மாதங்களாகவே மும்பையில் தங்கி ஷாருக்கானுக்கான கதையை உருவாக்கி வந்தார். பல கரெக்ஷனுக்கு பின்னார் கதை இப்போது ஓகே ஆகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

இப்படத்தின் வேலைகளை மும்பையில் தங்கியிருந்து மும்முரமாக செய்து வருகிறார் அட்லீ. ஆனால், அட்லியை பொறுத்தவரை ஒரு காட்சிக்கு என்ன செலவோ அதை கலை இயக்குனருடன் விவாதித்து விட்டு, அதற்கான பட்ஜெட்டை தயாரிப்பாளரிடம் கூறுவார். தயாரிப்பாளர் அப்பணத்தை கொடுத்துவிடுவார். பட்ஜெட்டும் கூறியதை விட அதிகமாகவே முடியும். ஆனால், பாலிவுட்டில் இது வேலைக்கு ஆவாது.
ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்டோர் அட்லியின் அலுவலகத்திற்கு வந்து அன்றைய செலவுகளின் கணக்குகளை கேட்டு தலைவலியை கொடுக்கிறார்களாம். ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல முடியாமல் ‘ஏன்டா இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டோம்’ என தினமும் அனாசின் போட்டு வருகிறாராம் அட்லீ.
தமிழ் சினிமா போல் பாலிவுட்டில் எல்லாம் ஒரு படத்திலிருந்து எளிதாகவெல்லாம் விலகி போக முடியாது. எனவே, என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வருகிறாரம் அட்லீ.





