ராதிகா புருஷன் தான நீ... ரொம்ப அசிங்கமா போச்சு... பேட்டியில் புலம்பி தவித்த பப்லு ப்ரித்வி...!
தமிழ் சினிமாவில் நான்கு சுவர்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் பப்லு பிரித்வி. தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் சிறுவயது முதலே நடித்து வந்திருக்கின்றார். சினிமாவில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்று பலமுறை தனது ஆதங்கத்தை கூறி இருக்கின்றார். தற்போது அவருக்கு 58 வயதாகின்றது.
இவர் இடையில் ஒரு சர்ச்சையில் கூட சிக்கி இருந்தார். தன்னைவிட அதிக வயது குறைவான பெண்ணை திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார். பின்னர் அவர் பப்லுவை விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதை பல பேட்டிகளில் கூறி புலம்பித் தவித்து வந்தார். இதையடுத்து தற்போது மீண்டும் ஒரு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் வாணி ராணி சீரியலில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்.
அதில் பேட்டியில் அவர் தெரிவித்திருந்ததாவது: " நடிகர் அஜித்துடன் அவள் வருவாளா என்ற படத்தில் நடித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தும் எனக்கு வாய்ப்பு பெரிய அளவு கிடைக்கவில்லை. என்னை பார்ப்பவர்கள் எல்லாம் அஜித்துடன் கூட நடித்திருக்கிறீர்கள், அவரெல்லாம் இப்போது மிகப்பெரிய நடிகராக இருக்கிறார். நீங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு என்ன பதில் சொல்வது என்பது கூட எனக்கு தெரியாது.
சினிமாவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் சீரியலில் நடிக்க வந்தேன்நான். ஆனால் வாணி ராணி சீரியலில் நடித்து இருக்கவே கூடாது. சினிமாவில் நடிகை ராதிகா ஒரு அவ்வையார். அவருக்கு ஜோடியாக நான் நடித்ததால் பல அவமானங்களை சந்தித்தேன். அவருக்கு புருஷனா நடிச்சது தான் நான் பண்ண பெரிய தப்பு. ரியாஸ் கானும், நானும் ஒரு ஜிம்மில் ஒர்க்கவுட் செய்து முடித்துவிட்டு வெளியில் வந்து கொண்டிருந்தோம்.
அப்போது காரை எடுக்க முடியாமல் எடுத்துக் கொண்டிருந்தோம். ரியாஸ்கான் எனக்கு வழி சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அங்கு வந்த ரசிகர்களில் சிலர் ரியாஸ்கான பார்த்து ஹாய் சொல்லி அவரை பாராட்டினார்கள். உடனே என்னை பார்த்தவுடன் காருக்குள்ள பழைய நடிகர் இருக்காரு பாரு என்று கூறினார். உடனே யாரடா சொல்ற என்று கேட்டதும், உங்கள தான்.. நீங்க ராதிகாவோட புருஷனா நடிச்சவரு தானே என்று கமெண்ட் அடித்து விட்டுப் போனார். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது" என்று புலம்பி இருக்கின்றார் பப்லு பிரித்வி.