புல்டோசரை வச்சு இடிக்கப் போனதே விஜய்தான்.. சுதந்திரத்தை பற்றி பேசுறாரா? பிரபலம் சொன்ன தகவல்
எதிர்ப்பு தெரிவித்த விஜய்: ஒரு பத்திரிக்கை துறையின் இணையதளம் மூடப்பட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதற்கு ஆளும் அரசும் ஒன்றிய அரசும் தான் காரணம் என எதிர்ப்பு தெரிவிக்கிறார். நேரடியாக சொல்ல வேண்டுமென்றால் பாஜக தான் காரணம் எனக் கூறும் பொழுது நீங்க கருத்து சுதந்திரம் பற்றி பேசுவதற்கு அருகதை இருக்கா? ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை என சொல்கிறீர்களே ?அதனுடைய சுதந்திரத்தை இயங்க விட்டீர்களா நீங்கள் ?என விஜய் பக்கமே இந்த கேள்வி இப்போது திரும்பி இருக்கிறது. இதற்கு ஏற்ப லொள்ளு சபா என பயங்கரமான விஷயங்களை கனெக்ட் செய்து சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் விஜய்க்கு எதிராக வைரல் ஆகி வருகின்றன.
உண்மையில் என்ன நடந்தது என்பதை பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியிருக்கிறார். அதாவது ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை. அதை பலமுறை விஜயும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரம் புல்டோசர் எடுத்துட்டு போய் இடித்து உடைத்திருக்கிறார்கள். அதாவது நான்காம் தூணை இடித்து உடைத்து ஜனநாயகம் இப்போது மூன்று தூணில் தொங்குகிறது என்பதற்கு நிறைய வேலைகளை இவர்கள் செய்து இருக்கிறார்கள். இப்பொழுது அரசியல் தலைவராகி விட்டார் விஜய்.
விஜயின் வேறுமுகம்: அதனால் இப்பொழுது வேறு முகம் காட்ட ஆரம்பித்து விட்டார். பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கக் கூடாது .இதை வன்மையாக கண்டிக்கிறேன் என சொல்லி வருகிறார் .இதெல்லாம் சரியா வருமா? ஆரம்ப காலங்களில் இவர்கள் பண்ண அட்டகாசங்கள் எல்லாம் நிறைய இருக்கின்றது. அதாவது ரசிகன் படத்திலிருந்து இந்த பிரச்சனை ஆரம்பமானது. ரசிகன் படத்தின் விமர்சனம் குமுதம் பத்திரிக்கையில் வெளிவந்தது. விமர்சனத்தை முடிக்கும் பொழுது கடைசி இரண்டு வரிகளில் ஒன்று எழுதி இருந்தார்கள். அது என்னவெனில் நெளிந்த தகர டப்பா மூஞ்சி. இந்த மூஞ்சி எல்லாம் பாக்கணும்ங்கிறது தமிழ்நாட்டு ரசிகர்களின் தலை எழுத்து என இப்படி முடித்து தான் அந்த விமர்சனத்தை எழுதியிருந்தார்கள்.
இந்த விமர்சனத்தை பார்த்ததும் எஸ் ஏ சி, விஜய், ஷோபா அனைவரும் கொந்தளித்து விட்டனர். அந்த காலத்தில் விஜயை நிறைய உருவ கேலிகள் பண்ணார்கள் .பத்திரிக்கையில் மட்டுமல்லாமல் நேரடியாகவே உருவ கேலிகள் பண்ணினார்கள். இதனால் நிறையவே எஸ் எஸ் சி பாதிக்கப்பட்டார். அதனால் நேரடியாக குமுதம் பத்திரிக்கைக்கு போனார் எஸ் ஏ சி. அவர் மட்டும் அல்ல 160 பேர் அடியாள்களுடன் போனார். அந்த பத்திரிக்கையின் வரவேற்பு அறையை அடித்து நொறுக்கினார்கள். அதன் பிறகு குமுதம் பத்திரிக்கையின் எழுத்தாளர் சுஜாதா வந்து தான் அவரை சமாதானம் படுத்தி கட்டுப்படுத்தி அனுப்பினார்.
ஆட்களுடன் இறங்கி அட்டகாசம்: அதே மாதிரி தேவி என்ற ஒரு பத்திரிக்கை முன்பு இருந்தது. அதில் ஒரு எழுத்தாளர் தேவி மணி என்பவர் விஜய் பற்றி ஒரு கிசுகிசு எழுதி இருந்தார். இதே மாதிரி ஒரு 60 பேரை கூட்டிக்கொண்டு தேவி பத்திரிக்கையிலும் போய் எஸ் எஸ் சி மொத்தமாக ஆட்களுடன் இறங்கிவிட்டார் .அதன் பிறகு நெற்றிக்கண் என்ற பத்திரிகையில் விஜயும் சங்கீதாவும் பிரிந்து விட்டார்கள் என்ற ஒரு செய்தி வந்தது. அதற்கும் மறுபடியும் ஆட்களுடன் போய் சண்டைக்கு போய் நின்றார். விஜயை பொறுத்த வரைக்கும் எல்லாருடைய பார்வையில் விஜய் மிகவும் அமைதியானவர் .யாரிடமும் பேச மாட்டார் என்று தான் நினைக்கிறார்கள். அது உண்மைதான்.
ஆனால் அவருக்கு கோபம் வந்தால் வேற மாதிரி ரியாக்ட் பண்ணுவார். அதற்கு உதாரணமாக ஒரு சிறிய காணொளி வைரலானது .அவர் பேசிக்கிட்டு இருக்கும்போது திடீரென அங்கிருந்த பத்திரிகை நண்பர்கள் சலசலவென சத்தம் போட திடீரென நாற்காலியை தட்டிக்கொண்டு கத்திய வீடியோ எந்த அளவு வைரலானது. அது போக்கிரி பட சமயத்தில் தான் நடந்தது. அதைப்போல விஜயின் திருமணம் பற்றிய அறிவிப்பை பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.ஏ.சி வெளியிடுகிறார். அப்போது அந்த விழாவிற்கு விஜய் தாமதமாக வருகிறார். அவர் வருவதற்கு முன் எஸ் ஏ சி சங்கீதாவை பற்றி பத்திரிகையாளர்களுக்கு சொல்லிவிட்டு இது நாங்கள் பார்த்து நிச்சயம் செய்த பெண் என கூறி அறிமுகம் செய்து வைக்கிறார்.
தகுதியானவரா?:அந்த நேரத்தில் விஜய் வர அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் இதோ விஜய் வந்துவிட்டார். இப்போது உண்மையெல்லாம் தெரிந்துவிடும் என கமெண்ட் அடிக்க எஸ்ஏசி அந்த நேரத்தில் மோசமாக ரியாக்ட் செய்தாராம். அதோடு விஜயும் அந்த பத்திரிகையாளரை வெளியில் வைத்து கையை ஓங்கி ஜாக்கிரதையாக இரு என்பதை போல மிரட்டி விட்டு சென்று இருக்கிறார். ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிக்கை தான் .அதற்கு ஒரு பிரச்சனை வரும் பொழுது குரல் கொடுக்க வேண்டியது சரிதான். ஆனால் குரல் கொடுப்பதற்கு இவர் முதலில் தகுதியானவரா என யோசிக்க வேண்டும் என பாலாஜி பிரபு கூறியிருக்கிறார்.