10 ஆயிரம் கேட்டா 20 ஆயிரம் தருவாரு!.. காமெடி நடிகரை புகழ்ந்த பாவா லட்சுமணன்... யாருப்பா அந்த வள்ளல்..?

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் பாவா லட்சுமணன். வடிவேலு காமினேஷனில் பல படங்களில் நடித்து அசதி இருக்கின்றார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசதி இருக்கின்றார். அதிலும் சரத்குமாரின் மாயி திரைப்படத்தில் 'வாமா மின்னல்' என்ற டயலாக் இன்றளவும் ஃபேமஸ்-ஆக இருந்து வருகின்றது.

கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படங்களிலும் இவரை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் சர்க்கரை நோய் அதிகமான காரணத்தினால் கால் கட்டை விரலை அகற்றும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் பாவா லட்சுமணன். அப்போது உதவி கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதை பார்த்த பலரும் இவருக்கு உதவி செய்திருந்தார்கள். பின்னர் உடல்நலம் தேறி பல youtube சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இவர் வடிவேலு குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் தன்னுடன் இருந்த பல காமெடி நடிகர்களை அவர் கண்டு கொள்வதே கிடையாது. அவர்கள் கஷ்டப்பட்டால் கூட அவர்களுக்கு உதவி செய்வது கிடையாது.

வடிவேலுவை நாம் ஒரு காமெடி நடிகராக பார்க்கிறோம். ஆனால் கேமராவுக்கு பின்னால் அவர் நடந்து கொள்வதே வேறு. வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக காமெடி நடிகர்கள் யாரையும் வளர விட மாட்டார். தன்னை மீறி தனித்துவமாக யாராவது நடித்து விட்டால் போதும் அவரை எப்படியாவது கட்டம் கட்டி கீழே இறக்கும் வேளையில் இறங்கி விடுவார். மேலும் அவர்களை அடுத்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவிடாமல் செய்துவிடுவார் என பல அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர் சந்தானம் குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். சந்தானம் ஒரு மிகச் சிறந்த மனிதர். அவர் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது ட்ராக் எழுதுவதற்காக சில நபர்களை கூட வைத்திருந்தார். அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து வந்தார். தற்போது அவர் ஹீரோ ஆன பிறகும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றார்.

கொரோனா காலகட்டத்தில் வேலையே இல்லாத சமயத்திலும் கூட அவர் சம்பளம் கொடுத்து வந்தார். அவரிடம் மொத்தம் ஐந்து பேர் இருக்கிறார்கள். அதில் ஒருவருக்கு 5 லட்சம் சம்பளம், மற்றொருவருக்கு 3 லட்சம், 2 லட்சம் கடைசியாக ஒருவருக்கு ஐம்பதாயிரம் வரை என்று சம்பளம் கொடுத்து வருகின்றார். ஒரு முறை நான் அவரிடம் உதவியாக பத்தாயிரம் ரூபாய் கேட்டேன். ஆனால் அவர் எனக்கு 20,000 ரூபாயை கொடுத்தார். அவ்வளவு நல்ல மனிதர் சந்தானம் என்று மிகப் பெருமையாக பேசி இருந்தார். இவர் கலகலப்பு திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story