">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிக்பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம்…? மாப்பிளை இவர் தான்!
பிக்பாஸ் ஜூலிக்கும், பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்று தகவல் வெளியாகி தீயாக பரவி வருகிறது. ஆனால், யார் அந்த நபர் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஜூலியும் இதனை உறுதி செய்யவில்லை. இருந்தாலும், இந்த விஷயத்தை கேட்டதும் இணையவாசிகள்… அம்மா தாயே இனிமேலாவது வாய் வச்சுகிட்டு வாழ்க்கையை நடத்து என பொழச்சு போ என்கிற பாணியில் வாழ்த்தி வருகின்றனர்.
நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.
மேலும், அம்மன் தாயி, Dr.S அனிதா MBBS , பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட சில படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார். அப்படியிருந்தும் ஜூலி என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது. அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார்.
தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். சமீப நாட்களாக ட்விட்டர் பக்கமே தலைகாட்டாமல் ஒதுங்கியிருப்பதால் அவரை கேலி , கிண்டல் ஏதும் வருவதில்லை மாறாக திருமணம் என்ற நல்ல சேதி கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள் ஜூலி..