தன்னை தாண்டி வளர்ந்ததால் விஜய் மீது ரஜினிக்கு எரிச்சல்!.. கொளுத்திப்போட்ட பிரபலம்!...

by ராம் சுதன் |

ரஜினி சூப்பர்ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் இருந்தபோது சிறுவனாக அவரின் ரசிகராக இருந்தவர்தான் விஜய். விஜய் விரும்பி பார்ப்பதே ரஜினியின் படங்களைத்தான். அவரை பார்த்துதான் விஜய்க்கும் நடிக்க வேண்டும் என்கிற ஆசையே வந்தது எனவும் சிலர் சொல்வதுண்டு. யாரிடம் பேசினாலும் ரஜினியை எப்போதும் ‘தலைவர்’ என்றே குறிப்பிடுவார் விஜய்.

அதே விஜய் சினிமாவில் நுழைந்து படிப்படியாக வளர்ந்தார். தமிழ் சினிமாவின் முதல் 50 கோடி வசூல் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படம்தான் என்பது பலருக்கும் தெரியாது. அந்த பெருமை ஒரு ரஜினி படத்திற்கு கூட கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. ரஜினி சீனியர்தன். சூப்பார்ஸ்டார் மற்றும் வசூல் மன்னன்தான். அதில் எந்த மாற்றுக்கருத்தும் யாருக்கும் இல்லை.

ஆனால், விஜய் படிப்படியாக வளர்ந்து இப்போது ரஜினியை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருக்கிறார் என்கிற உண்மையை மறுக்க முடியாது. ரஜினிக்கு எப்போதும் நான் மட்டுமே நம்பர் ஒன் இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு. பல வருடங்களாக அதை அவர் விட்டு கொடுக்கவில்லை.

ஆனால், விஜய் அந்த இடத்தை பிடித்ததோடு அதையும் அவர் தாண்டிவிட்டார் என்பதே உண்மை. இது ரஜினிக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியதால்தான் ஜெயிலர் பட விழாவில் காக்கா - கழுகு கதையை சொன்னார். அதன்பின் அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகவே ‘நான் விஜயை சொல்லவில்லை. அவர் நான் பார்த்து வளர்ந்த பையன்’ என மழுப்பினார்.

இந்நிலையில்தான் விஜயை விட ரஜினிக்கு அஜித்தையே மிகவும் பிடிக்கும். விஜய் தன்னை தாண்டி போய்விட்டார் என்கிற எரிச்சல் ரஜினிக்கு உண்டு என பிரபல சினிமா செய்தியாளர் வலைப்பேச்சு அந்தணன் சொல்லி இருந்தார். இதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் ‘சினிமாவுல மட்டும் தாண்டினா பரவாயில்ல. அரசியலுக்கு வரேன்னு 25 வருசமா ஏமாத்தாம பொசுக்குன்னு வந்துட்டான். இவன் என்ன ரொம்ப டார்ச்சர் பண்றாண்டா’ என ரஜினி சொல்வது போல கமெண்ட் அடித்திருக்கிறார்.

இதையடுத்து, ரஜினி ரசிகர்கள் மாறனை கடுமையாக திட்டி வருகின்றனர். இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகரை ஒரு சின்ன நடிகரோடு ஒப்பிடுவது உங்கள் அறியாமை என சிலர் பொங்க ‘யாரு தர்பார் தாமோதரனா?’ என பதிலடி கொடுத்து கலாய்த்து வருகிறார் புளூசட்ட மாறன்.

Next Story