1. Home
  2. Latest News

ரெட் ஜெயண்ட் மூவிஸ் பண்றது சரியில்ல!. அட போஸ் வெங்கட்டே சொல்லிட்டாரே!....


Red Gaint Movies: மறைந்த முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் தற்போதையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டால்னின் மகன் என்கிற அடையாளத்துடன் பார்க்கப்பட்டவர் உதயநிதி. கல்லூரி படிப்புக்கு பின் சினிமாவில் ஆர்வம் கொண்டு ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்.

இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படம் குருவி. இதில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அதன்பின் சூர்யா, கமல் உள்ளிட்ட பல நடிகர்களையும் வைத்து இந்நிறுவனம் படங்களை தயாரித்தது. மேலும், புதிய படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்யும் வினியோகஸ்தராகவும் இந்நிறுவனம் செயல்பட துவங்கியது. திமுக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமே இந்நிறுவனம் ஆக்டிவாக இருக்கும். ஆட்சி மாறினால் சைலண்ட் மோடுக்கு போய்விடும்.

ஒருகட்டத்தில் உதயநிதியே சினிமாவில் நடிக்க துவங்கினார். அவர் நடித்த எல்லா படங்களையும் ரெட் ஜெயண்ட் நிறுவனமே தயாரித்தது. விஜய், அஜித், கமல், ரஜினி உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை இந்த நிறுவனமே வெளியிடும். படத்தை ரெட் ஜெயண்ட்டிடம் கொடுத்துவிட்டால் பிரச்சனை இல்லாமல் வெளியாகும் என்பதால் பல நடிகர்களும் அந்த நிறுவனத்தையே நாடினார்கள்.


இதனால், பல வினியோகஸ்தர்கள் வருமானம் இல்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், திமுக ஆட்சியில் இருப்பதால் அவர்களை எதிர்த்து பேச யாருக்கும் துணிவு வரவில்லை. மேலும், கணக்கு வழக்குகளில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் சரியாக இருப்பதால் பல தயாரிப்பாளர்கள் அந்த நிறுவனத்திற்கே வினியோக உரிமையை கொடுக்க முன் வருகிறார்கள்.

இந்நிலையில், சீரியல் நடிகர், சினிமா நடிகர், இயக்குனர் என பல முகங்களை கொண்ட போஸ் வெங்கட் முதன்முறையாக இதை எதிர்த்து பேசியிருக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஒரு படம் என மொத்தம் 12 பெரிய படங்கள் வெளியாகிறது. இந்த 12 படங்களையும் ஒரே நிறுவனம்தான் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. வருடத்தில் 365 நாட்கலும் இவர்களுக்குதான் என்றால் இதையே தொழிலாக கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்?. நீங்கள் மட்டும்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற சூழலை ஏற்படுத்துவீர்களா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இப்படி கோபப்பட்டிருக்கும் போஸ் வெங்கட் ஒரு திமுக ஆதரவாளர். திமுக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். விஜய் மாநாட்டில் ஆக்ரோஷமாக பேசியபோது ‘தம்பி உன்னோடலாம் நாங்க அரசியல் செய்யணுமா?’ என பதிவிட்டு நக்கலடித்தவர். தொடந்து திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் போஸ் வெங்கட் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை விமர்சித்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்திருக்கிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.