பிஎஸ் மித்ரன் - கார்த்தி படத்திற்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்?

by adminram |

fc75b513795a6e94cb7502565be3c89d-1

விஷால், அர்ஜூன் நடிப்பில் இரும்புத்திரை என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பிஎஸ் மித்ரன் தனது முதல் படத்திலேயே கோலிவுட் திரையுலகை தனது பக்கம் திரும்ப வைத்தவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இவர் இயக்கிய இரண்டாவது திரைப்படமான ‘ஹீரோ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் திருப்திகரமாக இல்லை என்றே கூறப்படுகிறது. பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு இருந்தும் இந்த படத்திற்கு எதிர்பார்த்த வசூல் இல்லை என்பது தயாரிப்பு தரப்புக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக உள்ளது

இந்த நிலையில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் ஹீரோ ‘ படத்தின் ரிசல்ட் காரணமாக தற்போது இந்த படத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹீரோ படத்தின் கதை விவகாரம் குறித்த பஞ்சாயத்து ஒருபுறம் எழுத்தாளர் சங்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கார்த்திக் இந்த படத்தில் நடிக்க தயங்குவதாகவும், இதனால் இந்த படத்தின் அடுத்தக் கட்ட பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகின்றது

இதனை அடுத்து இந்த இதே கதையை மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து பிஎஸ் மித்ரன் இயக்க முடிவு செய்திருப்பதாகவும் சிவகார்த்திகேயனும் இந்த படத்தில் நடிக்க ஒப்புகொண்டுள்ளதாகவும், விரைவில் பிஎஸ் மித்ரன் - சிவகார்த்திகேயன் மீண்டும் இணையும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Next Story