கங்குவா பிளாப்.. இப்போதான் புத்தி வந்திருக்கு! புது டெக்னிக்கை கையில் எடுத்த சூர்யா

by ராம் சுதன் |

யாருக்குத்தான் இருக்காது, ரெண்டு வருஷமா உயிரக் கொடுத்து கடும் உழைப்பையும் போட்டு அதன் வெற்றியை பார்க்க ஆவலுடன் இருக்கும் போது ஒரு நொடியில் அதை தூக்கி குப்பையில் போடும் போது ஏற்படும் வலி இருக்கே? யாருக்குத்தான் இருக்காது? அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இருந்தார் சூர்யா. கங்குவா திரைப்படம். கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக இந்தப் படம் தயாரிப்பில் இருந்தது.

அதுவரை வேறெந்த படத்திலும் கமிட்டாகாமல் இதில் தன் முழு முயற்சியையும் கவனத்தையும் செலுத்தி வந்தார் சூர்யா. ஆனால் படம் சந்தித்தது என்ன? பிளாப். அதுவும் முதல் நாளிலேயே அனைவரும் நெகட்டிவ் கமெண்ட்களை வாரி இறைத்தார்கள். அதில் சூர்யாவின் உழைப்பும் மண்ணோடு மண்ணாக போனதுதான் மிச்சம். தற்போது சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கங்குவா படம் சூர்யாவுக்கு தக்க பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது. அதனால் மிகவும் அப்செட்டாகத்தான் இருந்தாராம் சூர்யா. அப்படி இருக்கும் போது ஒரு புது முடிவையும் சூர்யா எடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அதாவது இதுவரை சில பேர் சொல்லி படங்களில் நடிக்கிறது, தவறாக கதைகளை தேர்ந்தெடுப்பது என இருந்த சூர்யா இப்போது அந்த முறையை மாற்றியிருக்கிறாராம். இனிமேல் அவருடைய கால்ஷீட் மற்றும் கதை கேட்பதற்கு என தனியாக ஒருவரை நியமிக்க இருக்கிறாராம். அவர் வேறு யாருமில்லை. பாலிவுட் நடிகரான சல்மான் கானுடன் உடன் இருந்தவராம்.

சல்மான்கான் கால்ஷீட் மற்றும் கதை கேட்கும் பணியை இவர்தான் கவனித்து வந்தாராம். அதனால் அவரையே சூர்யா தேர்ந்தெடுத்திருக்கிறாராம். இனிமேல் சூர்யாவை பார்க்க வேண்டுமென்றால் இவரை தாண்டித்தான் போக வேண்டும்.

Next Story