அட்ஜெஸ்ட் செய்ய முடியாது - படத்திலிருந்து விலகிய ஷாலினி பாண்டே

272d6df88ce40ee208be4a711699005f

மூடர்கூடம் புகழ் நவீன் ‘அக்னி சிறகுகள்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண்விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.இப்படத்தில் அர்ஜூன் ரெட்டி புகழ் ஷாலினி பாண்டே நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆனால், 27 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் திடீரென படத்திலிருந்து விலகினார்.

பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால், படப்பிடிப்பு இடத்தை அவர் மாற்ற சொன்னதாக தெரிகிறது. ஆனால், படப்பிடிப்பு கஜகஸ்தானில் நடப்பதால் படப்பிடிப்பு தளத்தை மாற்ற முடியாது என அப்படத்தின் தயாரிப்பாளர் சிவா கூறிவிட்டதால், அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

அவருக்கு பதிலாக அக்‌ஷராஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஷாலினி பாண்டே மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Related Articles

Next Story