கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: விஜய்யை பின்பற்றும் அஜித்!

bfe3fec647e40ec1577dda0c8980cefa

தல அஜித் நடிப்பில், போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் அதிரடி போலீஸ் ஆக்சன் திரைப்படம் ’வலிமை’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த இந்த படப்பிடிப்பில் முக்கிய ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றுடன் முதல்கட்ட படப்பிடிப்பில் முடிவடைந்ததாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அஜித் இன்று சென்னை திரும்பியுள்ளார். இன்று அவர் தனது குடும்பத்தினர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அஜீத்தின் மனைவி ஷாலினி கிறிஸ்துவர் என்பதால் ஷாலினியுடன் அவர் கிறிஸ்துமஸ் விழாவைக் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருவது வழக்கமாக இருந்து வரும் இந்த ஆண்டும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார் -

ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ’தளபதி 64’ படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்று முன்தினம் சென்னை திரும்பிய விஜய், லண்டனுக்கு கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாட தனது குடும்பத்தினர்களுடன் சென்றுள்ள நிலையில் தற்போது அஜித்தும் கிறிஸ்துமஸ் விழாவை குடும்பத்தினர்களுடன் கொண்டாட சென்னை திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வலிமை படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

 

Related Articles

Next Story