More

அப்புறம் அரசியலுக்கு வரேன்..ஏமாந்து போன ரசிகர்கள்…ரஜினி அரசியல் எடுபடுமா?

நடிகர் ரஜினி கடந்த சில நாட்களாக தனது அறிவிக்கப்படாத கட்சியின் மாவட்ட செயலாளர்களை சந்தித்து பேசி வந்தார். இப்படிப்பட்ட பரபரப்பான நிலையில், ரஜினி இன்று சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசுவதாய் அறிவிக்கப்பட்டது.

Advertising
Advertising

எனவே, அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என அவரின் ரசிகர்களும், மாவட்ட செயலாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை எனவும், ஆட்சிக்கு வந்த பின் இப்போது இருப்பது போல் பல பதவிகள் இல்லாமல் தேவையான சிலவற்றை மட்டுமே வைத்துக்கொள்வேன் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், இளைஞர்களுக்கு எம்.எல்.ஏ பதவி…கட்சிக்கு ஒரு தலைமை… ஆட்சிக்கு ஒரு தலைமை… தான் முதல்வர் இல்லை. என அவர் கூறிய பல கருத்துகள், அவரை நம்பி அரசியலுக்கு வரவேண்டும் என ஆசையில் இருந்த பலருக்கும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.

அவர் கூறுவது மாற்று அரசியல் என்றாலும், அதை ஏற்கும் மனோதிடம் மக்களுக்கோ இல்லை அவரின் ரசிகர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இருக்க வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம் ஆகும்.

இறுதியில், இதை மாவட்ட செயலாளர்களிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதைத்தான்  ஏமாற்றம் எனக்கூறினேன். ஆனால்,  அரசியலில் அழகு பார்ப்பது எனக்கு பிடிக்காது. எனக்கு பதவியில் ஆர்வம் இல்லை. 

எனவே, இது மக்களிடம் கூற முடிவெடுத்த இங்கு வந்தேன். முடிவை மக்களிடமே விடுகிறேன். நான் முதல்வர் இல்லை என அனைவரும் பேசி அதன் மூலம் மக்களிடையேயும், இளைஞர்களிடையேயும் ஒரு எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன். இந்த சிந்தனை இந்தியா முழுவதும் பரவ வேண்டும். அரசியல் மாற்றம். ஆட்சி மாற்றம் என்பதே முழக்கமாக இறுக்க வேண்டும்.  அப்படி எழுச்சி ஏற்பட்டால் நான் அரசியலுக்கு வருவேன் என மீண்டும் குழப்பிவிட்டு ரஜினி சென்றுவிட்டார்.

இதிலிருந்து நேரடி அரசியலுக்கு வர ரஜினிக்கு விருப்பமில்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், இதை அவரின் ரசிகர்கள் ஏற்பார்களா? அவரின் சிந்தனையை மக்கள் புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்…

Published by
adminram