">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கமல் வீட்டின் முன் கொரோனா எச்சரிக்கை போஸ்டர் – ரசிகர்கள் அதிர்ச்சி
நடிகர் கமலஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தின் முன்பு கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு சென்று வந்தவர்களின் வீடுகளில் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா சந்தேகம் உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கரை ஒட்டி அருகாமையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போஸ்டர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளதால சர்ச்சை உருவாகியுள்ளது. அந்த வீடு தற்போது கமலின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. கமல் சமீபகாலமாக வெளிநாடுகளுக்கு எதுவும் சென்று வரவில்லை என்பதால் ஏன் அந்த போஸ்டர் அங்கு ஒட்டப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் உள்ள கையெழுத்திலும் சில குழப்பங்கள் உள்ளதாக சொல்லப்படும் நிலையில் அது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது ‘சரியாகத்தான் ஒட்டப்பட்டிருகிறது’ என பதில் கொடுத்ததாக மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்த நோட்டீஸை மாநகராட்சி ஊழியர்கள் நீக்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,எதற்காக கமல் வீட்டில் ஒட்டினார்கள்? ஏன் நீக்கினார்கள்? என்பதை மாநகராட்சி அதிகாரிகளுக்கு வெளிச்சம்..