More

சினிமாவில் மட்டும் ஹீரோவாக இருக்கக் கூடாது!.. விஜய்க்கு குட்டு வைத்த நீதிமன்றம்…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் முக்கியமானவர் நடிகர் விஜய். இவரின் சம்பளம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் சம்பளத்தை நெருங்கி விட்டது. அதாவது அவர் ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளது. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், 2012ம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் இறக்கு மதி செய்தார். இந்திய சட்டப்படி வெளிநாட்டிலிருந்து ஒரு காரை இறக்குமதி செய்தால் அதற்கு குறிப்பிட்ட சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஆனால், தனக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை விஜய் நாடினார். 

இந்நிலையில், விஜயின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் ரூ.1 லட்சம் அபாரதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த அபாரத தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார். 

திரைப்படங்களில் சமூக நீதிக்கு பாடுபடுவது போல் நடிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோவாக இருக்க கூடாது எனவும் அவர்கள் அறிவுத்தியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts