More

இயக்குனர் இறந்துவிட்டதாக போலிச் செய்தி வெளியிட்ட விமர்சகர்… இயக்குனரின் பதில்!

இயக்குனர் அனுராக் காஷ்யப் இறந்துவிட்டதாக விமர்சகர் கமால் ஆர் கான் இணையத்தில் செய்தி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

பாலிவுட் இயக்குனர் தன் படங்களின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவின் முகமாக அறியப்படுபவர். இவர் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்நிலையில் இறந்துவிட்டதாக அவர் இறந்துவிட்டதாக  கமல் ஆர் கான் என்ற விமர்சகரின் பக்கத்தில் செய்தி வெளியானது. கமல் கான் பாலிவுட்டில் பல சர்ச்சைகளில் சிக்கிய விமர்சகர் ஆவார்.

இந்நிலையில் அனுராக் காஷ்யப் அந்த செய்தியைப் பார்த்து ‘எமதர்ம ராஜனை நேற்று சந்தித்தேன். என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டு இன்னும் நீ பல திரைப்படங்கள் எடுக்கவேண்டும் என சொல்லி சென்றார்’ என நக்கலாக பதில் சொல்லியுள்ளார்.

Published by
adminram

Recent Posts