அந்த சத்தம் கேட்குதா!.. விஜய்யை விட மாஸ் காட்டிய தனுஷ்!.. ராயன் ஆடியோ லாஞ்சில் அதகளம்!..
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் செல்வராகவன், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீபி கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தனுஷின் 50வது படமான ராயன் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் ஏற்கனவே வெளியான அடங்காத அசுரன், வாட்டர் பாக்கெட் மற்றும் ராயன் ரம்பல் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு நடிகர் தனுஷ் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்துக் கொண்டு செம மாஸாக வருகை தந்தார். ஆழப்போறான் தமிழன் உள்ளிட்ட விஜய் பட பாடல்களும் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒலித்தன.
நடிகர் தனுஷ் ராயன் இசை வெளியீட்டு விழாவுக்கு உள்ளே நுழையும் போது அதிகபட்சமாக 111 டெசிபிள் சத்தம் கேட்டதாக ரசிகர் ஒருவர் ரெக்கார்டு செய்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார்.
அதேபோல கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வரும் போது 103 டெசிபிள் சத்தம் தான் ஒலித்ததாகவும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு தனுஷ் தான் மாஸ் என்றும் தனுஷ் ரசிகர்கள் செய்த சம்பவம் என்றும் டி ஃபேன்ஸ் வைரலாக்கி வருகின்றனர்.