கையில் ருத்ராட்ச மாலையுடன் சாமி தரிசனம் செய்த தனுஷ்... பக்தி முத்திடுச்சு போலயே..!

by ramya suresh |

தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமாகி தற்போது இயக்குனராக அசதி வருகின்றார் நடிகர் தனுஷ். ஒரு பக்கம் நடிப்பு, மற்றொரு பக்கம் இயக்கம் என மிக பிஸியாக இருக்கின்றார். இவர் இயக்கி வெளியான 50வது திரைப்படம் ராயன். இந்த திரைப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் ஹீரோவாகவும் நடித்து அசதி இருக்கின்றார்.

இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது. இந்தியா முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. அது மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இதனால் மிகவும் குஷியில் இருக்கின்றார் நடிகர் தனுஷ். இவர் இயக்கிய முதல் திரைப்படமான பவர் பாண்டி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது திரைப்படமும் இவரை சிறந்த இயக்குனர் என்று நிரூபிக்க வைத்துள்ளது.

சமீப நாட்களாக நடிகர் தனுஷ் அடிக்கடி கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார். ஆன்மீகத்தில் மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றார். படம் வெளியாவதற்கு முன்பு தங்களது குலதெய்வ கோயிலுக்கு மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்து வந்த தனுஷ் தற்போது திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று இருக்கின்றார்.

ஆடி கிருத்திகையை முன்னிட்டு நடிகர் தனுஷ் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று கையில் ருத்ராட்ச மாலையுடன் கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து சாமி தரிசனம் செய்து கொண்டார். நடிகர் தனுஷ் உடன் அவரது மகன்களும் வந்திருக்கிறார்கள். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பலரும் அவரைக் காண கோவிலுக்குள் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் கூட்டத்தை கட்டுப்படுத்தி தனுசை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். நடிகர் தனுஷ் மிகுந்த பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

Next Story