அக்கட தேசத்துடன் ஓவராக ஒட்டி உறவாடும் தனுஷ்... இதுக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா..?
தமிழில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது தன்னுடைய 50 வது திரைப்படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து இருக்கின்றார். பவர் பாண்டி என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் ராயன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் தன்னை சிறந்த இயக்குனராக நிரூபித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
கட்டாயம் இப்படம் வசூல் வேட்டை நடத்தும் என்று கூறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இப்படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், செல்வராகவன் உள்ளிட்ட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். அதிலும் ஏ ஆர் ரகுமானின் இசை இப்படத்தில் மிகப்பெரிய பிளஸ்-ஆக இருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது நடிகர் தனுஷுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. நடிகர் தனுஷ் சமீப காலமாக தமிழ் பட இயக்குனர்களை விட்டுவிட்டு தெலுங்கு பட இயக்குனர்களுடன் கைகோர்த்து வருகின்றார். தெலுங்கு சினிமா பக்கம் அதிகமாக கவனம் செலுத்துகிறார் என்ற தகவல் வெளியாகி வருகின்றது.
ஏற்கனவே வெங்கி அட்லுரி என்பவர் இயக்கத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் கிஷோர் பி இயக்கத்தில் தனுஷ் மற்றொரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றது. இது ஒரு புறம் இருக்க வெற்றிமாறன் என் டி ஆர் மற்றும் தனுஷின் வைத்து தமிழ், தெலுங்கு சினிமாவில் மற்றொரு படத்தை இயக்க இருப்பதாகவும் புரளி கிளம்பி வருகின்றது . இது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. இப்படி தெலுங்கு பக்கம் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார் நடிகர் தனுஷ்.
ஏன் ராயன் திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சையும் தெலுங்கில் ஒருமுறை வைத்திருந்தார். இது தொடர்பான வீடியோ கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இப்படி நடிகர் தனுஷ் தெலுங்கு பக்கம் அதிகம் கவனம் செலுத்துவதற்கு காரணம் தன்னை ஒரு பான் இந்தியா நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக தானாம்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் தெலுங்குகாரர் என்பதால் இவருக்கு தெலுங்கு சரளமாக பேச வரும். தெலுங்கு சினிமாவில் சில படங்களை கொடுத்தால் அங்கும் பிரபலமாகிவிடலாம் என்று கணக்கு போட்டு வைத்திருக்கின்றார். மேலும் ராயன் திரைப்படத்தை பிரமோஷன் செய்வதற்கும் இப்படி ஒரு வேலைகளை செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.