வைரமுத்து டாக்டர் பட்டம் வழங்கும் விழா: ராஜ்நாத்சிங் புறக்கணிப்பா?

5c459f4da172e0afc47f5bb46d55940a-1

கவியரசு வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்பட ஒரு சில பெண்கள் மீடூ குற்றச்சாட்டுகளை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது தெரிந்ததே. அதுமட்டுமின்றி ஆண்டாள் குறித்து வைரமுத்து அவர்கள் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து சர்ச்சைகளில் சிக்கிய வைரமுத்துவுக்கு ஒரு சில முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் பாடல்கள் எழுத வாய்ப்பு அளிக்க மறுத்து விட்டதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வந்தது

இந்த நிலையில் வைரமுத்துவுக்கு சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. இந்த பட்டத்தை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் வழங்கவிருப்பதாக அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் மீடூ குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவின் டாக்டர் பட்டவிழாவுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள கூடாது என பாஜகவினர் சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை எழுப்பி வந்தனர்

இதனையடுத்து தற்போது பாஜக பிரமுகர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்கும் விழாவில் இருந்து ராணுவ அமைச்சர் விலகி உள்ளதாகவும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Related Articles

Next Story