More

தில் பச்சேரா  முதல் நாள் வசூல் 950 கோடி – ரஹ்மான் பகிர்ந்த தகவல்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படமான தில் பச்சேரா கடந்த ஜூலை  24  ஆம் தேதி வெளியாகி ஒரே நாளில் 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertising
Advertising

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலைக்குப் பிறகு அவரது கடைசிப் படமாக தில் பச்சேரா கடந்த ஜூலை 24 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த படம் ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் உள்ள சுஷாந்தின் ரசிகர்களால்  வியக்கத்தக்கவைக்கும் வகையில் முதல் நாளிலேயே 9.5 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளில் இத்தனை பேர் பார்த்திருந்தால்  950 கோடி ரூபாய் வசூல் ஆகி இருக்கும் என அந்த செய்தியில் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹாட்ஸ்டாரில் இந்த படம் ரசிகர்கள் அனைவரும் பார்க்கும் விதமாக இலவசமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
adminram

Recent Posts