70 ஆயிரத்துக்கு கரகாட்டக்காரன் படத்தை வாங்கி 7 லட்சம் லாபம் பார்த்த இயக்குனர்... யாரப்பா அவரு?

by ராம் சுதன் |

மக்கள் நாயகன் ராமராஜனின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்த படம் கரகாட்டக்காரன். இது வருடக்கணக்கில் ஓடி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. படத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே தரமானவை. காமெடியிலும் கவுண்டமணி, செந்தில் பட்டையைக் கிளப்பி இருப்பார்கள். இப்படி ஒரு படத்தை நாம் ஜாலியாக பார்த்திருக்கவே மாட்டோம். படம் முழுக்க பார்க்கும் போது நேரம் போறதே தெரியாது.

இந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் எல்லாருமே நல்ல லாபத்தை சம்பாதித்தனர். அவர்களில் ஒருவர் தான் இயக்குனர் பாரதி கண்ணன். அவர் இதுகுறித்து என்ன சொல்கிறார்னு பார்ப்போமா...

பத்திரிகையாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் என பன்முக அவதாரம் எடுத்தவர் இயக்குனர் பாரதி கண்ணன். முதல் படமே கரகாட்டக்காரன் படத்துக்குத் தான் விநியோகஸ்தர் ஆனேன். ராமராஜன் வந்து பத்திரிகையில் இன்டர்வியு எடுத்த பழக்கத்துல நண்பர் ஆனார்.

அவர் ரொம்ப எளிமையா இருப்பார். பேசறது, நடிக்கறதுன்னு. இப்பவும் அப்படித்தான். நடிகர்கள்ல ஒரிஜினலா வாழ்ந்தது அவரு மட்டும்தான்னு நினைக்கிறேன். 'கரகாட்டக்காரன் பாருங்க பாரதி'ன்னாரு. 'டைட்டிலே நல்லாருக்க. வைரமுத்து எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. 50 வாரம் ஓடிடும்.

மினிமம் 25 வாரம் ஓடிடும்'னு நான் சொல்றேன். ராமராஜன் படம் பார்த்துட்டு வெளியே வந்தாரு. 'பாரதி எப்படிருக்கு? கரெக்டா சொல்லுங்க. நீங்க பத்திரிகைக்காரர்... சொல்லுங்க'ன்னு சொன்னாரு. 'சார் நீங்க நடிச்சதுலயே ரொம்ப பிடிச்ச படம். லைப் டைம்ல ரெக்கார்டு பிரேக் படம்'னு சொன்னேன்.

அவருக்கு அந்த நம்பிக்கை எல்லாம் இல்ல. 'சும்மா சொல்லாதீங்க. நாலு வாரம் போகும். மிஞ்சிப் போனா நான் இருக்கறதால 5 வாரம் போகும்'னாரு. 'அந்தப் புரொடியூசரால எனக்கு சம்பளமே கொடுக்க முடியல. மதுரை சிட்டி ஏரியாவ எனக்குக் கொடுத்துருக்காங்க. மதுரை 5ரூபா, சிட்டி 2 ரூபா ஏழு ரூபாக்குத் தான் நான் வாங்கிருக்கேன்'னாரு.

'இல்ல இல்ல. இந்தப் படம் பெரிசா போகப்போகுது'ன்னு சொன்னேன். அதுக்கு 'நீங்க வேணா சிட்டி 2 ரூபா தான. வாங்கிக்கோங்க'ன்னாரு. சென்னை ஏரியாவ 2 லட்ச ரூபாய்க்குத் தர்றாரு. எங்கிட்ட அப்போ காசு இல்ல. நான் ப்ரண்ட் சர்க்கிள்ல கேட்டு கேட்டுப் பார்த்தேன். 70 ஆயிரம் ரூபா கிடைச்சது.

அப்பவும் ராமராஜன் அருமையான வார்த்தை சொன்னாரு. 'பாரதி 70 ஆயிர ரூபான்னா பரவாயில்ல. 3 தியேட்டர் போட்டுருக்கோம். கொடுத்துட்டு நீங்க வச்சிக்கோங்க. அதுல உள்ள காசு எல்லாம் உங்களுக்கு'ன்னாரு. இந்த டீலிங் நல்லாருக்கன்னு நான் சம்மதிச்சேன். நானும் நண்பரும் கஷ்டப்பட்டு கடனை எல்லாம் வாங்கி 70 ஆயிரம் கொடுத்து வாங்கினோம். 7 லட்ச ரூபாய் சம்பாதிச்சோம்.

நான் என்ன எதிர்பார்த்தேனோ அதைத் தாண்டுச்சுன்னு கூட சொல்லலாம். அந்தப் பணத்தை வச்சிப் புதுவசந்தம் வாங்கிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story