More

இயக்குனர் கே.வி.ஆனந்த திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதவர் கே.வி.ஆனந்த். காதல் தேசம் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உருவான முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கனா கண்டேன், கோ, அயன், மாற்றான்,அனேகன், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். விரைவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

Advertising
Advertising

இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் மரணமடைந்தர். அவரின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணியளவில் பெசண்ட்நகர் மின் மயானத்தில் நடைபெறவுள்ளது.

சமீபத்தில் நடிகர் விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரின் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரையுலகம் மீளாத நிலையில் கே.வி.ஆனந்தின் மறைவு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கே.வி.ஆனந்தின் மறைவுக்கு ரஜினி, கமல்ஹாசன், வைரமுத்து உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts